Go to content Go to menu

படைப்புகள்

2010-05-15

 நற்கவிஞர்.செ.பா.சிவராசன் அவர்கள் எழுதிய‌"விழிகள் தீட்டிய சிற்பி "
எனும் கவி1------.------.-------------------------------------------------.jpgதைத் தொகுப்பு                               

 

 

 

 ********************************************************************************************

thiruvalluvar1.jpg

ஆக்க வேண்டாமா...? - அம்மா..! 
ஆக்க வேண்டாமா...?

ஆக்க வேண்டாமா...? - ஐயா..!
ஆக்க வேண்டாமா...?

ஆக்க வேண்டாமா...? - அக்கா 
ஆக்க வேண்டாமா...?

ஆக்க வேண்டாமா...? - தம்பி 
ஆக்க வேண்டாமா...?

இந்தியர் நம் தேச நூலாய் 
திருக்குறளை ஆக்க வேண்டாமா..?

அன்புபடி அறிவுமடி செறிவுடனே பெருக 
ஆற்றல்கொடி ஏற்றும்படி மண்டலமே மலர
இல்வாழ்வுப்படி நல்வாழ்வு செய்யும்படி  இல்லோர் வளர 
இல்வாழ்வின்படி விருந்தோம்பும்படி மனமெல்லாம் கொள்ள 
ஈதல்படி இனிமைசேர்க்கும்படி இளையோர் எவரும் இணைய 
உழவுப்படி உலகக்கொடி  உயர்த்திடவே உதவ

-    ஆக்க வேண்டாமா...?
ஆக்கப்போறோம்- அம்மா..! 
ஆக்கப்போறோம்

ஆக்கப்போறோம்- ஐயா..!
ஆக்கப்போறோம்

ஆக்கப்போறோம்- அக்கா 
ஆக்கப்போறோம்

ஆக்கப்போறோம்- தம்பி 
ஆக்கப்போறோம்

இந்தியர் நம் தேச நூலாய் 
திருக்குறளை ஆக்கப்போறோம்.

அன்புபடி அறிவுமடி செறிவுடனே பெருக 
ஆற்றல்கொடி ஏற்றும்படி மண்டலமே மலர
இல்வாழ்வுப்படி நல்வாழ்வு செய்யும்படி  இல்லோர் வளர 
இல்வாழ்வின்படி விருந்தோம்பும்படி மனமெல்லாம் கொள்ள 
ஈதல்படி இனிமைசேர்க்கும்படி இளையோர் எவரும் இணைய 
உழவுப்படி உலகக்கொடி  உயர்த்திடவே உதவ

-    ஆக்கப்போறோம்

ஆக்க வேண்டாமா...? - அம்மா..! 
ஆக்க வேண்டாமா...?

ஆக்க வேண்டாமா...? - ஐயா..!
ஆக்க வேண்டாமா...?

ஆக்க வேண்டாமா...? - அக்கா 
ஆக்க வேண்டாமா...?

ஆக்க வேண்டாமா...? - தம்பி 
ஆக்க வேண்டாமா...?

இந்தியர் நம் தேச நூலாய் 
திருக்குறளை ஆக்க வேண்டாமா..?

ஊழின்படி சூழும்தீமைமுடி வசந்தங்கள் வருத்த
     அடக்கபடி கோபம்முடி தடங்கல்கள் தகர்க்க 
நீரின்படி ஊரின்வழி உலகம் ஏறி செல்ல
தவத்தின்படி வருத்தக்கொடி நோய்கள் நொறுக்க 
கேட்டல்படி கற்கும்செடி சான்றோரென ஆக 
பொருள்படி உலகமடி உண்மையோடு பொருள் சேர்க்க
-    ஆக்க வேண்டாமா...?
ஆக்கப்போறோம்- அம்மா..! 
ஆக்கப்போறோம்

ஆக்கப்போறோம்- ஐயா..!
ஆக்கப்போறோம்

ஆக்கப்போறோம்- அக்கா 
ஆக்கப்போறோம்

ஆக்கப்போறோம்- தம்பி 
ஆக்கப்போறோம்

இந்தியர் நம் தேச நூலாய் 
திருக்குறளை ஆக்கப்போறோம்.

ஊழின்படி சூழும்தீமைமுடி வசந்தங்கள் வருத்த
 அடக்கபடி கோபம்முடி தடங்கல்கள் தகர்க்க 
நீரின்படி ஊரின்வழி உலகம் ஏறி செல்ல
தவத்தின்படி வருத்தக்கொடி நோய்கள் நொறுக்க 
கேட்டல்படி கற்கும்செடி சான்றோரென ஆக 
பொருள்படி உலகமடி உண்மையோடு பொருள் சேர்க்க

-    ஆக்கப்போறோம்

ஆக்க வேண்டாமா...? - அம்மா..! 
ஆக்க வேண்டாமா...?

ஆக்க வேண்டாமா...? - ஐயா..!
ஆக்க வேண்டாமா...?

ஆக்க வேண்டாமா...? - அக்கா 
ஆக்க வேண்டாமா...?

ஆக்க வேண்டாமா...? - தம்பி 
ஆக்க வேண்டாமா...?

இந்தியர் நம் தேச நூலாய் 
திருக்குறளை ஆக்க வேண்டாமா..?

ஒழுக்கப்படி உயர்வுபடி ஊருலகம் கட்ட 
வாய்மைபடி பொய்மைஇடி இடம் விட்டகல 
துறவுபடி ஆசையுறவுமுறி பற்றுகள் பட்டுப்போக
பொதுமறைப்படி முறைப்படி இந்தியர் நாம் திழைக்க

-    ஆக்க வேண்டாமா...?
ஆக்கப்போறோம்- அம்மா..! 
ஆக்கப்போறோம்

ஆக்கப்போறோம்- ஐயா..!
ஆக்கப்போறோம்

ஆக்கப்போறோம்- அக்கா 
ஆக்கப்போறோம்

ஆக்கப்போறோம்- தம்பி 
ஆக்கப்போறோம்

இந்தியர் நம் தேச நூலாய் 
திருக்குறளை ஆக்கப்போறோம்.

ஒழுக்கப்படி உயர்வுபடி ஊருலகம் கட்ட 
வாய்மைபடி பொய்மைஇடி இடம் விட்டகல 
துறவுபடி ஆசையுறவுமுறி பற்றுகள் பட்டுப்போக
பொதுமறைப்படி முறைப்படி இந்தியர் நாம் திழைக்க

-    ஆக்கப்போறோம்

 

-------------------------------------------------- 

 

 

 

 

 

 

 

 

 nagercoil-bookfair-2014.jpeg

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
வாசிப்பை நேசிக்க புத்தகம் பற்றிய பாடல்



பல்லவி

ஞானத்தின் வாசல் எது..? புத்தகங்களே...!
-------- (2)
வானத்தின் வாழ்விருக்கும் பூமியின் கதையிருக்கும்
புனிதரின் அருளிருக்கும் பூக்களின் இனம் இருக்கும்
--- ஞானத்தின்

சரணம்-1

வாசிப்பின் நேசிப்பில் ஞானம் சேருது மனம்
யோசிப்பின், வாசிப்பே ஞானம் ஆகுது தினம்
மொழியின் பிள்ளை நூல் தொட்டிலிலே
வழியின் முள்ளை மாத்துது நூல் தினமே
முந்தி வா நூல் படித்து
தந்தி தா வெற்றி எடுத்து

ஓய்வினில் நூல் எடுத்து
ஓதிடும் சொற்களிலே
தாழ்வெனும் குணம் எல்லாம்
தரை மட்டம் ஆகிடுமே
---- ஞானத்தின்

சரணம்-2

முன்னோர்கள் வாழ்ந்த வாழ்வுதனை
இந் நாளும் புத்தகங்கள் சொல்லும்
விண்ணோர்கள் தந்து சென்றதனை
மண்ணுலகம் இன்று படிக்கும்
இப்போதெல்லாம் ... நீ
இணையத்தில் இதயத்தை இணைக்கிறாய்
முக நூலில் விழிகளைக் கோர்க்கிறாய்
பயணத்தில் பாதி மறக்கிறாய்
நிமிர்ந்திருந்தே பாதி படிக்கிறாய்
குனிந்துதானே நீ வாழ்கிறாய்
நிமிர்ந்து நீ வா வாழ
குனிந்து படி
குனிந்து படித்தால்
நிமிரும் வெற்றியடி

----ஞானத்தின்


----------------------------------

பல்லவி

விழிகள் கேட்கட்டும் புத்தகம் படி
விழிகள் வெல்லட்டும் நித்தமும் இனி
மொழிகள் வாழ்த்தட்டும் உன்னை இனி
ஒளிகள் காட்டட்டும் புத்தகம் படி

-- விழிகள்

சரணம்-1
வலிகள் என்னென்ன ..? விதிகள் சொல்லுமே...! - மாற்ற
வழிகள் என்னென்ன ...? புத்தகம் சொல்லுமே
-2

அண்ணலும் அண்ணாவும் உயர்ந்தது எப்படி..?
எண்ணம் எல்லாமும் கொண்ட கொள்கைப் படி
கலாமும் காமராஜரும் வாழ்ந்தது எப்படி..?
கனவுகள் எல்லாம் கொண்ட கொள்கைப் படி
நீயும் நாளை சிறப்பாய் மாற
யோசனை செய்யவும் வாசிப்பு வேண்டும்
-விழிகள்

சரணம்-2

பயணம் என்னென்ன...? பாதைகள் சொல்லுமே..!
தருணம் என்னென்ன...? புத்தகம் சொல்லுமே
-(2)

மேதைகள் யாவரும் உயர்ந்தது எப்படி..?
புத்தக கண்பட்டு புதுமை அறிந்தபடி

ஏக்கங்கள் எவருக்கும் களைந்தது எப்படி..?
தாக்கங்கள் தாழிட தகர்த்த வழிபடி

புதுவழி திறந்திட நீ நனி சிறந்திட
யோசனை செய்யவும் வாசிப்பு வேண்டும்
-விழிகள்

 

----------------------------------------------

திரு .நரேந்திர மோடி அவர்கள் இந்திய நாட்டின் பிரதமராகப் போகிறார் என்ற செய்தி கேட்டு 19-05-2014 அன்று அவருக்கு வாழ்த்து (வேண்டுகோளுடன்) தெரிவித்து அவருடைய முக நூலில் பதிவு செய்த பாடல்.

 

பல்லவி

 

இந்தியாவை ஆழ வந்த

நரேந்திரமோடி வாழ்க..!

 

இந்தியாவை காக்க வந்த

காவல் தூதர் வாழ்க...!

 

சரணம்-1

 

ஓடும் நதி ஓடி வந்து

உன் பெயரைப் பாடி துதித்து

மோடி உன்னை வாழ்த்துதே..!

நதிகள் இணைக்க வேண்டுதே...!

 

மது இல்லா மாநிலமாம்

குஜராத் ஓடி வந்து

மோடி உன்னை வாழ்த்துதே..!

எந் நிலமும் இதுபோல் ஆக வேண்டுதே...!

 

அன்னை மொழி அவசியமாம்

ஆயுள் வரை கூட்டிடுமாம்

அம்மொழியும் உன்னை வாழ்த்துதே..!

அன்னைமொழி ஆயுள் கேட்குதே...!

 

இனி வல்லரசு நல்லரசு இந்தியா என

சொல்லரசு மொழிகின்ற

காலம் கூட கனியுதே..!

 

(இந்தியாவை ஆழ வந்த

நரேந்திரமோடி வாழ்க..!

 

இந்தியாவை காக்க வந்த

காவல் தூதர் வாழ்க...!)

 

சரணம்-2

 

பண்பாடு ஓடி வந்து

பண்ணெடுத்துப் பாடி வந்து

ஒருவனுக்கு ஒருத்தியென நினைவூட்டுதே...!

மாறி வாழ்ந்தால் தண்டிக்க சொல்லுதே...!

 

நாட்டிற்குள் இருக்கும் வளம்

அயல் நாட்டிற்கு எதற்கு..? - மீட்க

கருப்புப் பணம் கெஞ்சுதே...!

இந்தியரின் கடன் தீர்க்க

கருப்புப் பணமிருக்கு - இனி

பஞ்சம் இல்லையே...!

 

விவசாயி மீனவர் உயிரையே

வீணாய் முடிக்கின்ற நிலமையை

விண்மீன்கள் எடுத்து சொல்லி வாழ்த்துதே...!

விவசாயிக்கும் மீனவர்க்கும்

முன்னுரிமைக் கொடுக்கச்சொல்லி வேண்டுதே...!

 

இந்தியரின் நாடிதான் - இனி

நரேந்திர மோடிதான்

இந்தியா வல்லரசு ஆகும்தான்...!

மோடி வழி ஓடிதான்..!

 

(இந்தியாவை ஆழ வந்த

நரேந்திரமோடி வாழ்க..!

 

இந்தியாவை காக்க வந்த

காவல் தூதர் வாழ்க...!)

 

-------------------

 

பாடல்- 2

 

பல்லவி

 

உன்னாலே வளமாகும் நாடு

உண்ணாமலே வாழ்பவர் இனி யாரு..?

 

உண்மைகள் ஒளி வீசும் போது

ஊழலும் ஒழிந்திடும் பாடு

 

சரணம்-1

 

உழவனே இல்லா நாடு

வளமாகுமா எண்ணியே பாரு..?

அரசாங்க உழவர் ஆனால்

எல்லோரும் வழமாய் வாழ்வோம்

விலையேற்ற உயர்வு வராது.

 

அணுவழி மின்சாரம் மூடு

அபத்தாய் முடியும் பாரு

சூரிய மின்சாரம் ஒன்றே மேலானது

இயற்கையைக் காப்பதே பொறுப்பு

அரசாங்கம் முன்னெடுத்தால் சிறப்பு

இனி .. இயற்கையும் அழியாது.

 

(உன்னாலே வளமாகும் நாடு

உண்ணாமலே வாழ்பவர் இனி யாரு..?

 

உண்மைகள் ஒளி வீசும் போது

ஊழலும் ஒழிந்திடும் பாடு)

 

சரணம்-2

 

சிறியவர் சீர்கெட்டு போவத பாரு

இளமையில் குற்றவாளி ஆவத நீ தீரு

தியானம் ஒன்றைப் பாடத்திட்டம் சேர்த்தால்

திருந்திடுவானே நலமாய் வாழத்தானே

வளமாவது நாடும் தானே

 

மதம் வழி மனிதம் வளர வளருது நாடு

எல்லா மதத்திற்கும் ஒரே கோயில் நீ கட்டு

மனிதர்கள் ஒன்றாகும் போது

மகத்துவம் காணுமே நாடு

 

மாற்றங்கள் நாட்டுக்குத் தேவை

மாற்றுங்கள் நாட்டின் தீமை

 

முடியாதது என்று ஏழைக்கு உண்டு

முடிவது எல்லாம் அரசனால்(பிரதமரால்) நன்று.

 

(உன்னாலே வளமாகும் நாடு

உண்ணாமலே வாழ்பவர் இனி யாரு..?

 

உண்மைகள் ஒளி வீசும் போது

ஊழலும் ஒழிந்திடும் பாடு)

 

- கவிஞர் செ.பா.சிவராசன்

கன்னியாகுமரி மாவட்டம்

தமிழ் நாடு

 

 

 

 

 

marthandam-bus-stand-poem.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

ஆட்சி இங்கு நடக்குதா..?

 

எங்க கூட்ட கலைச்சு
எத்தனை நாளாச்சு..?

எங்க வீட்ட இடிச்சி
எத்தனை வருசமாச்சு..?

ஓடி வந்து ஓய்வெடுக்க
கூடி வந்து சனங்க
எனக்குள்ள இடம் பிடிக்க

வசதியா இருந்த
எங்க கூட்ட கலைச்சு
எத்தனை நாளாச்சு..?

எங்க வீட்ட இடிச்சி
எத்தனை வருசமாச்சு..?

காக்கைக்கும்..காட்டு குருவிக்கும்
ஒதுங்க இடம் உண்டு
எங்களுக்கு இடம் உண்டா..?

பள்ளத்த மேடா மாத்தித்தான்
கொள்ளை அழகாக்க்கும் திட்டமாம்..!

திட்டம் புதிய திட்டம்
எதிர்காலத்துக்குப் பயனில்ல

கட்டம் இக்கட்டம்
இத்திட்டம் போதவில்ல

நிலையம் பேருந்து நிலையம்
அலைச்சல் குமைச்சல் மாறவில்ல

எத்தனை வருச சனி இதுவோ..?
எண்ணக்கி மாறும் தலை விதியோ..?

மாவட்டத்தின் ...இரண்டாம் தலை நகரம்
யார் கேட்டும் மாறல
இது... நரகம்

விண்கலப் பயணம்
தினம் கிரகம்

விடியலே இல்லாமல்
எத்தனை வருடம்...?


அரசுன்னு ஒண்ணு இருக்குதா..!?
பொது மக்களுக்குத்தான்
அது உழைக்குதா..?

ஆட்சி இங்கு நடக்குதா..?
பேச்சு மூச்சில்லாம போனதா..?


ஆண்டவர்கள்...வாக்காளர்களுக்கு
வரம்  கொடுக்கிறார்கள் 
எவரையும் நிராகரிக்கலாம் என்று..!


எங்க வீட்டைப் போல..!

 

 மார்த்தாண்டம் பேருந்து நிலையம் கின்னஸில் இடம் பிடிக்குமா..?

 ---------------------------------------------------------------------------------

எங்கள தேவதையா ஆக்கி..!

sivarasan-palavilai.jpg
கொட்டி கிளிச்சிடுச்சே
கட்டி வச்ச கோட்ட
அமிலம் கிளிச்சிடுச்சே
கட்டி வச்ச கோட்டய

வட்டிக்கு வாங்கியா அழகானேன்...!
சந்தனத் தொட்டியில குளிச்சா நிறமானேன்
பட்டினியா கிடந்துதானே பொண்ணானேன்
பத்தினியா வாழத்தானே 
பல ஊரும்போய் 
பல சாமிகிட்ட வேண்டியிருக்கேன்

வெட்ட வெளியில வருகையில
விடல பசங்க கண்ணுக்கு என்னானேன்..?
வீட்ட பூட்டி கிடக்கையில
வீட்ட சுத்தி சுத்தி வருதுக

பள்ளி,கல்லூரி போகையில-பின்னால
துள்ளி துள்ளி வருகுதுங்க

உடலு உறுப்பு உள்ளங்கள
விரலு கூட விடாம சொல்லி காட்டி
உள்ளம் ஓண்ண வெள்ளமா
கரைச்சு விட்டு - எங்க
மனசத்தான் கெடுத்துப் போகுதே..!


எங்கள் கைகள்
மருதாணி வச்சா சிவக்கும்
எங்கள் கண்கள்
நாக்கு இல்லாம பேசுறவங்க
சொல்லாலே சிவக்குதே..!

வழியா போகையில 
துணை போல வந்து 
துளைக்கிறாங்க நெஞ்ச
காதலிக்கச் சொல்லி 
கரும்பலகையும் கட்டளை இடுதே..!
கரும்புகையும் கட்டளை இடுதே..!
வெள்ளாடும் கட்டளை இடுதே..!
முள்ளாடும் கட்டளை இடுதே..!
கட்டளைகள எங்க
கட்டுப்பாடுகள தொட்டு விடாம
தடுக்குற விரக்தியில

விடலைங்க கோபப்பட
கோபத்த கொட்டித் தீர்க்க
அமிலமும்...
கொட்ட இடம் 
எங்கள் முகமும்தானா..!

அமிலம் வீசி அழிக்க
நாங்களென்ன பூச்சிகளா..!
அவங்க செய்வதென்ன
காதல் விவசாயமா..?

எங்கள தேவதையா ஆக்கி
காக்க வந்த தேவதைங்க
கை விரிச்சிடுச்சே..!






----------------------------------------------------------------------------------------------------------
எங்களைத் தடை செய்யாதீர்..!

                                                                                                     எங்களை..!
sivarasan-poems-palavilai.jpgஉங்கள் முகம் பார்த்து வீசுகையில்
கொள்ளையர்களை எச்சரிக்கைச் செய்கிறோம்
விசையோடு வீசுவதால் - எங்களால்
திசை மாற முடியவில்லை
திசைமாற்றம் எமக்கிருந்திருந்தால்
வீசும் கைகளை நாசம் செய்திருப்போம்
எங்களால் உங்களுக்குண்டான காயம் போல்
ஆறா காயம் நாங்களும் கொள்கிறோம்
உங்கள் அழகு முகங்களைப் பழுதாக்கி
உணர்வுகளைச் சருகாக்க
எங்களுக்கு மனமில்லை
தயவு செய்து எங்களைத் தடை செய்யாதீர்..!
கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் 
தண்டனை முறைக்கு
அமிலத்திற்கு அமிலம் 
நான் தாயாராயிருக்கிறேன்..!

தயவு செய்து எங்களைத் தடை செய்யாதீர்..!


----------------------------------------------------------------------------------

பல்லவி

கொளு கொளுண்ணு பொண்ணு பொண்ணு
கொலு கொலுன்னு கண்ணு கண்ணு
கண்ணு ரெண்டால நிலவ கட்டி போட்டாளே
என் நெஞ்சுக்குள்ள நிலவ உலாவ விட்டாளே..
யப்பா..யப்பா... அய்யப்பா..

கொளு கொளுண்ணு பொண்ணு பொண்ணு
கொலு கொலுன்னு கண்ணு கண்ணு



அனுபல்லவி

தானே தானே தானே தானே தானே தானே
தானே புயலா வந்து போகிற தானே தானே

சரணம்-1

சித்திரையில சிரிக்கிறப்ப
சில்லற சத்தம்

நித்திரையில நினைக்கிறப்ப
வெண்மதி சொர்க்கம்

கட்டுரையில முன்னுரை
கட்டழகா நிக்குற

கடலுக்குள்ள சர்க்கரை
வெடல மனசுக்குள்ள இனிக்கிற 

அனுபல்லவி

தானே தானே தானே தானே தானே தானே
தானே புயலா வந்து போகிற தானே தானே

- ( கொளு கொளுண்ணு )


சரணம்-2

காட்டுல சந்தன மரமா நிக்குற
என்ன வீரப்பனா ஆக்குற

பனைமரச் சோறா இருக்கிற
பணய கைதியாய் ஆக்குற

மனசுல கோலம் போடுற
வயச ஏலம் போடுற

குறுஞ்செய்தியா தினம் வருகுற
மன இன்பாக்ஸ நிரப்புற

அனுபல்லவி

தானே தானே தானே தானே தானே தானே
தானே புயலா வந்து போகிற தானே தானே

- ( கொளு கொளுண்ணு )





பல்லவி

குறிஞ்சி பூவே.. குறிஞ்சி பூவே.. பிரிஞ்சி செல்லாதே..!
காதல் மனதைக் காயம் கொண்டு இடித்துக் கொல்லாதே..!
மெளனங்கள் மொழியானால் மந்திரம் பலிக்காதே..!
தந்திரமாய் எந்திரனாய் எனை மாற்றி கொல்லாதே..!

குறிஞ்சி பூவே.. குறிஞ்சி பூவே.. பிரிஞ்சி செல்லாதே..!
காதல் மனதைக் காயம் கொண்டு இடித்துக் கொல்லாதே..


சரணம்- 1

திறந்த இதயம் மூடி சென்று
உதிர்ந்த சருகாய் கிடக்கிறாய்

உயிரை வாங்கிப் பயிரைப் போலே
பலன் தரவே முளைக்கிறாய்

தேடல் தூண்டி காமன் வேடம் பூண்டு
வேட்டையாடிக் கொள்கிறாய்

ரெத்தம் முழுதும் உன் நெனப்பு கொதிக்க
வருத்தம் வைத்து உதைக்கிறாய்..

குறிஞ்சி பூவே.. குறிஞ்சி பூவே.. பிரிஞ்சி செல்லாதே..!
காதல் மனதைக் காயம் கொண்டு இடித்துக் கொல்லாதே..

சரணம் - 2

விழிகள் நட்ட விதையென நீ -என்
விதிக்குள் புகுந்து வளர்கிறாய்

வள்ளல் போல உள்ளம் செய்து 
கொள்ளையிட்டுக் கொள்கிறாய்

இரவின் நிழலில் பணிகள் செய்து
உறவில் பயணிக்க வைக்கிறாய்

சிலையே.. நீ சிற்பியென்று
என்னை செதுக்கிக் கொள்கிறாய்


குறிஞ்சி பூவே.. குறிஞ்சி பூவே.. பிரிஞ்சி செல்லாதே..!
காதல் மனதைக் காயம் கொண்டு இடித்துக் கொல்லாதே..

பெண் : நிலவு வந்து கனவு கண்டு 
உன்னைப் பற்றி சொல்லுதே

உதிரம் கூட உனக்கு சொந்தமாய்
உறுதியேற்றுக் கொள்ளுதே..

எண்ணம் யாவும்ஏணி வைத்து
எட்டி உன்னைப் பார்க்குதே..

பூக்கள் கூட சோலையாய்
பாக்கள் பாடி வாழ்த்துதே..









பல்லவி

குறிஞ்சி பூவே.. குறிஞ்சி பூவே.. பிரிஞ்சி செல்லாதே..!
காதல் மனதைக் காயம் கொண்டு இடித்துக் கொல்லாதே..!
மெளனங்கள் மொழியானால் மந்திரம் பலிக்காதே..!
தந்திரமாய் எந்திரனாய் எனை மாற்றி கொல்லாதே..!

குறிஞ்சி பூவே.. குறிஞ்சி பூவே.. பிரிஞ்சி செல்லாதே..!
காதல் மனதைக் காயம் கொண்டு இடித்துக் கொல்லாதே..


சரணம்- 1

உன் நிழலில் தூங்க நியாயம் கேட்டு
சுத்தும் பூமியைக் கட்டிப் போடுவேன்

உன் சிரிப்பை செதுக்கி சிம்பொனி ஆக்கி
சிகரம் மேலே உயர்த்துவேன்


உன் நினைவில் ஏங்க ஒத்தடம் போட்டு
நெஞ்சுக்கு வைத்தியம் செய்கிறேன்


கண்பட்ட மனமெல்லாம் காதல் கொள்ளாதே..
மனம் தொட்டு கண் பட்டா காதல் அழியாதே..


குறிஞ்சி பூவே.. குறிஞ்சி பூவே.. பிரிஞ்சி செல்லாதே..!
காதல் மனதைக் காயம் கொண்டு இடித்துக் கொல்லாதே..!



சரணம் - 2

உன் அருகில் அமர அனுமதி கேட்டு
உன் அன்புக்கு கடிதம் எழுதுவேன்

உன்னோடு சேரும் வரம் கேட்டு
சிவன் பார்வதியைத் தேடுவேன்..

நீ உடுக்கும் ஆடை பேசும் பூவிடம்
அறிமுகப் படுத்த விளைகிறேன்

உன் கையால தண்ணி கொடு போதும்
அந்த சுகத்தால ஆயுள் முழுசும் வாழ்ந்துக்கிறேன்.


குறிஞ்சி பூவே.. குறிஞ்சி பூவே.. பிரிஞ்சி செல்லாதே..!
காதல் மனதைக் காயம் கொண்டு இடித்துக் கொல்லாதே..!


 

------------------------------------------------------------------------------------------


ஆண் : ஹொய்யா ஹொய்யர ஹொய்யா ஹொய்யா..
ஹொய்யா ஹொய்யர ஹொய்யா ஹொய்யா..
குழு : ஹொய்யா..ஹொய்யா..

பல்லவி

குழு : ஹொய்யா.. 
ஆண் : திரு வள்ளுவர் தான்
குழு : ஹொய்யா.. 
ஆண் : திருக்குறள் தந்தார் நாம் வாழ வாழ்ந்து
குழு : ஹொய்யா ஹொய்யர ஹொய்யா ஹொய்யா..

ஆண் : வாழ்க்கை யாத்திரையில்
குழு : ஹொய்யா.. 
ஆண் : போகிறோம் போகிறோம் போகும் திசை மறந்து
குழு : ஹொய்யா ஹொய்யர ஹொய்யா ஹொய்யா..

ஆண் : அறத்தால் வருவதே இன்பம் இன்பம்டா
அடக்கம் இருந்தாலே அடங்கும் உலகுடா ஹோய்..



- (திரு வள்ளுவர் தான்....திசை மறந்து)

சரணம் - 1

ஆண் : ஈரடியில் உன்னடிகள் பொன் அடிகளாய் 
குழு : ஹொய்யா..
ஆண் : மண்ணடிகள் மாறும் உன் வடிவாக 
குழு : ஹொய்யா..ஹொய்யா..


ஆண் : அன்பு மடி அன்னை மடி அடிமை அடி இல்லாமல்
குழு : ஹொய்யா..
ஆண் : தூய்மையடி தாய்மையடி போற்று நன்றாக
குழு : ஹொய்யா..ஹொய்யா..


ஆண் : தாய் போற்றி நடக்க தயங்காதே..!
தெய்வ வாக்காம் குறளை மறக்காதே..!
குறளின்றி கொண்ட வாழ்வு யாவும்
உயிரின்றி கொண்ட வாழ்வாகும்
குறள் படித்தாலே
குழு : ஹொய்யா..ஹொய்யா..
ஆண் : குறை மாயும்
குழு : ஹொய்யா..ஹொய்யா..

ஆண் : நாள் முழுக்க நீ தழைக்க
நாடு குறளையே..! ஹோய்

- (திரு வள்ளுவர் தான்....திசை மறந்து)


சரணம் - 2

ஆண் : தீது தீர தூது வரும் நட்பு கூடாது 
குழு : ஹொய்யா..
ஆண் : கூடா நட்பால் குரோதம் கூடுமையா 
குழு : ஹொய்யா..ஹொய்யா..


ஆண் : காது வழி கேட்டு அறியும் சேதி கூட - உன் 
குழு : ஹொய்யா..
ஆண் : பாதை வழி பயணம் வரும் செல்வம் தானடா
குழு : ஹொய்யா..ஹொய்யா..


ஆண் : சபை அறிந்து பேசு சாயாதே..!
சேனையின் வலிமை ஆறாமே..!
தெரிந்து தெளியும் மனமாக
பொருத்து நெஞ்சில் பொதுவாக
உலகம் செழிக்க குறளாலே
உலகை ஆழு குறளாலே
குறள் படித்தாலே
குழு : ஹொய்யா..ஹொய்யா..
ஆண் : குறை மாயும்
குழு : ஹொய்யா..ஹொய்யா..

ஆண் : நாள் முழுக்க நீ தழைக்க
நாடு குறளையே..! ஹோய்

- (திரு வள்ளுவர் தான்....திசை மறந்து)




---------------------------------------------------------------------------------


பல்லவி

ஆண் : குறளே.. திருக் குறளே..
பொய்யா மொழி அமுதே

மறையே பொது மறையே
மறையாவும் உன் பொருளே

பாட பாட வாழ்வு இனிக்கும் - எம்
பாடுகளை நீ உரைக்கும்

தேசிய நூல் நீயடி - இனி
தேசியம் செழிக்க..மனிதம் நீயடி

ஓ....ஓ..... ஓ
பெண்

பெண் : குறளே.. திருக் குறளே..
பொய்யா மொழி அமுதே

ஆண் : மறையே பொது மறையே
மறையாவும் உன் பொருளே


சரணம் - 1

ஆண் : உன்னை வடித்தான் வள்ளுவனே
உலகம் அறிந்த ஆண்டவனே
உள்ளம் தழைக்க தந்த அரு மருந்தே..

பெண் : உன்னை வடித்தான் வள்ளுவனே
உலகம் அறிந்த ஆண்டவனே
உள்ளம் தழைக்க தந்த அரு மருந்தே..

ஆண் : அன்பு அறம் போற்றி வைத்து
ஆறறிவு ஊட்டி வைத்து
அடக்கம் பல சொல்லி வைத்து
அடக்கும் குண நூல் மருந்தே..!

பெண் : அன்பு அறம் போற்றி வைத்து
ஆறறிவு ஊட்டி வைத்து
அடக்கம் பல சொல்லி வைத்து
அடக்கும் குண நூல் மருந்தே..!


ஆண் : சொல்லி சொல்லி நீ வடிக்க
சொந்தம் கொண்டு நான் படிக்கும்
தேசிய நூல் நீயடி - இனி
தேசியம் செழிக்க..மனிதம் நீயடி

பெண் : ஓ.... ஒ... ஓ ...

பெண் : குறளே.. திருக் குறளே..
பொய்யா மொழி அமுதே

ஆண் : மறையே பொது மறையே
யாவும் உன் பொருளே

பெண் : பாட பாட வாழ்வு இனிக்கும் - எம்
பாடுகளை நீ உரைக்கும்

ஆண் : தேசிய நூல் நீயடி - இனி
தேசியம் செழிக்க..மனிதம் நீயடி

பெண் : ஆ........ஆ............ஆ........ஆ..


சரணம்- 2


பெண் : வாழ்வினை சிலை நிறுத்தி
வாழும் வழி நீ எழுதி
எம் மனதில் பேசுகின்ற வள்ளுவரே..!

ஆண் : வாழ்வினை சிலை நிறுத்தி
வாழும் வழி நீ எழுதி
எம் மனதில் பேசுகின்ற வள்ளுவரே..!

பெண் : கோடி மன ஓசை தன்னில் 
கூடி வாழ திசை செய்தாய்
உயிரோடு வாழும் யாவரும் 
உறவாட விழி தந்தாய்

ஆண் : கோடி மன ஓசை தன்னில் 
கூடி வாழ திசை செய்தாய்
உயிரோடு வாழும் யாவரும் 
உறவாட விழி தந்தாய்

பெண் : காமம் முதல் காலம் வரை
எக் காலமும் பொருந்தும் வரை
முக் காலத்துக்கும் பால் தந்து
எக்காலமும் வாழ்வு தந்த வரம்

ஆண் : காமம் முதல் காலம் வரை
எக் காலமும் பொருந்தும் வரை
முக் காலத்துக்கும் பால் தந்து
எக்காலமும் வாழ்வு தந்த வரம்


பெண் : ஈரடியில் நீ அளக்க
ஈருலகம் நாம் பிழைக்க

ஆண் : பாட பாட வாழ்வு இனிக்கும் - எம்
பாடுகளை நீ உரைக்கும்
தேசிய நூல் நீயடி - இனி
தேசியம் செழிக்க..மனிதம் நீயடி

பெண் : ஒ..தானன தான தானனா..
ஒ..தானன தான தானனா..

 

---------------------------------------------------------------------------------------------

பல்லவி


ஆண் : காதல் ஆழ்க உலகை எல்லாம்
காதல் வாழ்க உயிரில் எல்லாம்
காதல் கருவறையில் பிறப்பதே ஒரு முறை
காதலே... காதலே..இதயத்தின் .சுவாசமே...

---------- ( காதல் ஆழ்க )

சரணம் - 1

ஆண் : மனமும் மனதில் ஜனனம்
மனமும் நனவில் வாழும்

பெண் : ஜன்னல் வந்து பேசும்
மின்னல் வந்து போகும்..

ஆண் : அன்புக்கும் உண்மைக்கும் தன்னையே சமர்ப்பிக்கும்
காதல் வளம் தேவையே.....

பெண் : விழிகளால் விளம்பிடும் விலாசத்தில்
திசைகளும் புதிது ஒன்று திறக்குதே

ஆண் : பேதம் ஏதும் பேதம் இல்லாமலே
போதும் என்ற மனக் கொள்கையே..

---------- ( காதல் ஆழ்க )

சரணம் - 2

பெண் : உள்ளத்துக்குள் வாழ்ந்தாலும்
உலகத்து சுகம் நினைப்பதில்லை

ஆண் : உயிரின்றி வாழ்ந்தாலும்
காதல் இன்றி மரணம் இல்லை

பெண் : ஊரேது பேரேது உலகை எல்லாம் அறியாமலே
உள்ளத்திலே வந்து வாழுதே

ஆண் : அன்பின்றி வேறில்லை
வேறெதுவும் நிகரில்லை
காதல் ஒன்றே வேதம்
அழகு பணம் கேட்பதில்லையே...
அடகு மனம் மீள்வதில்லையே..

---------- ( காதல் ஆழ்க )



-----------------------------------------------------------------------------------

பல்லவி

ஆண் : உயிரால் உயிரை உயிரால் தேடும்
             உயிரும் கூட உனக்காக

உயிரால் உணர்வை உணர்வால் தரும்
உறவும் கூட உனக்காக

தவத்தால் பலிக்கும் வரத்தால் கிடைக்கும்
வாய்ப்புகழ் யாவும் உனக்காக

உசிரு போற கட்டத்துல
உன்ன நெனச்சுகிட்டே சாவேன் புள்ள
செத்தாலும் வருவேன் வாழ உன் கூட புள்ள

அனுபல்லவி

குழு : குறிஞ்சி பூவே .. குறிஞ்சி பூவே .. பிரிஞ்சி செல்லாதே..
காதல் மனதை காயம் கொண்டு இடித்துக் கொல்லாதே..

சரணம் - 1

ஆண் : சுடிதார தொட்டு சாயம் போடவில்ல
கடிகார முள்ளா என்ன கறக்கி விட்ட புள்ள

உனக்குள்ள நெஞ்சம் என்ன போலியா
யாரு கட்டி வச்சா காதலுக்கு வேலியா

கழுத்துண்ணா பொண்ணுக்கு தாலியா
இறங்காம பாத்துக்கிறேன் ராணியா

வானமே என்னோடு வாழ வாறியா
மனமே இல்லையெனச்சொல்லிப் போறியா..

அனுபல்லவி

குழு : குறிஞ்சி பூவே .. குறிஞ்சி பூவே .. பிரிஞ்சி செல்லாதே..
காதல் மனதை காயம் கொண்டு இடித்துக் கொல்லாதே..

சரணம் - 2

செல்லோடு செல்லில் சொல்லாடவில்ல
சொல்லாம செல்லில்(உயிர்செல்) குடிவந்த புள்ள

நமக்குள்ள காதல் என்ன தோல்வியா
என்ன தேவதாஸா ஆக்கிவிட்டு போறியா

வானவில்லையும் மின்னலையும் போலவா
வந்து போக காதல் ஒரு பாதையா

பூமியே நீ ஜெயிக்க வாறியா
பூமியில என்ன புதைச்சுட்டு போறியா

பெண் : உயிரால் உயிரை உயிரால் தேடும்
உயிரும் கூட உனக்காக

உயிரால் உணர்வை உணர்வால் தரும்
உறவும் கூட உனக்காக

தவத்தால் பலிக்கும் வரத்தால் கிடைக்கும்
வாய்ப்புகழ் யாவும் உனக்காக

உசிரு போற கட்டத்துல
உன்ன நெனச்சுகிட்டே சாவேன் புள்ள
செத்தாலும் வருவேன் வாழ உன் கூட புள்ள

 

-------------------------------------------------------------------------------------------        

பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி

- விளைவு 

 
------------------------------------------------------------------------------------------------------.jpg
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இனி ...
 
சில தமிழொலிகளும்
பல ஆங்கிலயொலிகளுமாய்
பிறிதொரு மொழி தோன்றலாம்
 
இனி ..
பார்வைக்கு எங்கும்
ஆங்கிலம் ஒளிரலாம்
செய்திகள் முதல் சினிமா வரை
மொழி மாறலாம்
 
இனி ...
தமிழினத் தலைவிப் பெயரைக் கூட
தமிழன் மாற்றிடுவான்
மதர் என்று
 
இனி ...
பெயர்மாறலாம்
தமிழ்நாடு கூட 
டுமில்கண்ட்ரி என்று
 
இனி...தமிழனைக் 
குண்டூசிகள் 
குத்திக் கொள்ளும் போதுதான்
அவன் வாய்கள்
தமிழ் பேசும்
அதுவும் தமிழென 
அவனுக்குத் தெரியாமல் 
 
 
இனி...
உயிரும் மெய்யும்
ஒற்றும் ஒட்டும் இருக்காது
இனப்பற்றும் சற்றும் இருக்காது
 
 
இனி... 
எல்லாம் வளரும்
தமிழன்..
ஆங்கிலவழி பயில்வதால்
அறிவும் பண்பாடும் தவிர
 
அதுதான் வளர்ச்சியோ..! 
 
ஓ..மனிதர்களே..
 
80 நாளில் வசமாகும் 
பிற மொழியினை
வசமாக்கிக் கொள்ளப் போகிறோம்..
வாழ் நாளெலாம் வழிகல்வியாக
தாய்மொழி இழந்து...
 
ஓ..தமிழ்நாடே.. நீ..
தாயைப் பறி கொடுத்து விட்டு
தாயில்லாத நாடாகிறாய்...
 
நீ மட்டுமல்ல
 
உனக்குச் சொந்தமான 
நாங்களும்தான்..!
 

                                   

----------------------------------------------------------------------------------------------------

 

                                      பல்லவி

ஆண் : அம்மா எனும் பதமே ஆண்டவன் தந்தது
            அதனாலே நானும் நீயும் உயிர் கொண்டது
            தாய் இல்லாமல் தாமரையும்
            தானாய் மலர்ந்தது இல்லையே..!

பெண் : அம்மா எனும் பதமே ஆண்டவன் தந்தது
             அதனாலே நானும் நீயும் உயிர் கொண்டது
             தாய் இல்லாமல் தாமரையும்
             தானாய் மலர்ந்தது இல்லையே..!


ஆண் : அம்மா எனும் பதமே ஆண்டவன் தந்தது
            அதனாலே நானும் நீயும் உயிர் கொண்டது
            தாய் இல்லாமல் தாமரையும்
            தானாய் மலர்ந்தது இல்லையே..!


                                             சரணம் - 1

ஆண் :    ஒரு அறை அதிலே
               வளர் பிறை போலே
               அன்பினை வளர்க்கையில் அன்னையாகிறாள்

பெண் :  கையில் குழந்தை மனதில் கனவு
              கொண்டுதான் கொஞ்சிதான்
              கொஞ்சம் சிரிக்கிறாள்

ஆண் :   ஒரு துணை ஆக உறு துணை ஆக
               உயிர் வாழத்தான் உதிரமும் அன்பும