Go to content Go to menu

நூல்கள்2

oruthi-oruvanukku---c.p.sivarasan.jpg
 
நூல்விவரஅட்டவணை
நூலின்தலைப்பு
 ஒருத்தி ஒருவனுக்கு
 
 
ஆசிரியர் பெயர்
செ.பா.சிவராசன்
 
 
மொழி
தமிழ்
 
 
முதற்பதிப்பு
2015
 
 
உரிமை
பதிப்பகத்தாருக்கு
 
 
வெளியீடு
கீதம் பப்ளிகேசன்ஸ்
3/3,பத்மாவதி அவென்யூ,
பெருங்குடி,சென்னை -96.
 
 
நூலின்அளவு
 டெம்மி 
 
 
 
 
 
 
அச்சுஎழுத்து
11 புள்ளி
 
 
 
 
 
அச்சிட்டோர்
சாய்தென்றல் ,சென்னை -4
 
 
விலை
 45 /-
 
 
மொத்தப்பக்கங்கள்
94
 
 
 

பதிப்புரை

அனைவருக்கும் வணக்கம்,


வெறுமனே ஏதோ நாமும் எழுதுவோம், எழுத்தாளன் என்று பிறர் சொல்வதில் பெருமிதம் கொள்வோம் என்று எழுத ஆரம்பிக்கின்ற அறிமுக எழுத்தாளர்கள் மத்தியில் இவருடைய அறிமுக எழுத்துக்களே இந்த சமூகத்திற்கு ஏதாவது ஒரு வகையில் நம் எழுத்துக்களும் சிந்தனைகளும் பயன்பட வேண்டும் என்ற அக்கறை உள்ள ஆசிரியர் இவர். இவருடைய முந்தைய நூல்கள் அதற்குச்சான்று.

அந்த வகையில் இவருடைய சமூக அக்கறைக்கு இந்த நூல் மற்றொரு சான்று . தான் சார்ந்த சமூகத்தோடு அதன் வாழ்க்கை முறையையும் உற்று நோக்கி நிகழ்ந்த நிகழ்வுகளை ஒரு சிறு நாவல் வடிவில் புதினமாய் இங்கு இவர் வழங்கியிருக்கிறார். அதில் உள்ள கருவே இப்புத்தகத்தின் தலைப்பாய் வைத்திருக்கிறார். எழுத்து நடை எளிமையாய் அழகாய் அதே சமயம் கருத்துக்களை ஆணித்தரமாய் வழங்கியிருப்பது சிறப்பு.

படித்துவிட்டு வாசகர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தால் இன்னும் இவருடைய வளர்ச்சி பெருகும். செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்உங்கள் ஞானசி
கீதம் பப்ளிகேசன்ஸ்
பெருங்குடி,சென்னை-96.

-----------------

முன்னுரை

விழுதாய் விழும் விழுதுகளாய் மனதிற்குள் ஆசைகள். மறக்க முடியாத காமன் மந்திரத்தில் பலியாகி பூமியெங்கும் தேவிகளின் அலறல்கள். தேவதைகள் பெயர் தாங்கி வேதனைத் தாங்கிகள். அடக்கிக் கொள்ள முடியாத ஆசைக் கம்பளங்களில் சீக்கிரமாய் வந்து போகிறவர்கள் கதைகளை நாலாப்புறமும் நிரப்பி நாலாப்புறமும் பரப்பும் ஊடகங்கள்.பெண்ணடிமை மாறி சம உரிமைக்கு வரும் காலக் கட்டத்தின் மாற்றம். அறிவியல் வாரிசுகள்(செல்போன்,பேஸ்புக்,டுவிட்டர்,வாட்ஸ் அப்) வளர்க்கும் கலாச்சார முறையில் எவரோடும் எவராயினும் பழகும் வாய்ப்பு. உடல்களைக் கவர அணியும் ஆடைகளின் அணிவகுப்பு. பாலியியல் கல்வி கேட்டு கண்களுக்குள் முடியும் போராட்டம். மூத்தோர் சொல்லுக்கும் கருத்துக்கும் இடமில்லாமை, ஒருத்தனுக்குப் பலரும், ஒருத்திக்குப் பலருமாய் வாழ்வதன் அடையாளமாய் இந்தியா எய்ட்ஸ்-ல் வளர்ச்சி. காதலில் வேறுபாதை போன்றவைகளால் உலகம் மாறி வரும் இக் காலக் கட்டத்தில், பாரத தாய் எனக்கு இட்ட கட்டளை ஒரு திரைப்படக் கதையாக எண்ணம் பெற்று பின் இப்படியொரு நாவலாய் மாற அதை சமூக மாற்றத்திற்கு ஓர் ஊடகமாய் புத்தக வடிவமாக்கி வெளியிட்டுள்ள கீதம் பதிப்பக நிறுவனத்திற்கு நன்றி நவில்கிறேன். ஒருத்திக்கு ஒருவனுமாய், ஒருவனுக்கு ஒருத்தியுமாய் வாழவும், அன்றாடம் நடக்கும் பாலியியல் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை இந்நாவல் மூலம் உலகுக்கு வெளிக் காட்டியுள்ளோம். இந் நாவலைப் படித்தபின் ஒருத்திக்கு ஒருவனுமாய், ஒருவனுக்கு ஒருத்தியுமாய் வாழ ஒவ்வொருவரையும் அவரவர் இதயங்கள் கேட்டுக் கொள்வது மட்டுமின்றி வாழச்செய்யவும் வைக்கும் என்பது உறுதி.


இந் நாவலைப் படைக்க உதவிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் உள்ளபடியே நன்றி நவில்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். மேலாக இந் நாவலைப் படிக்கும் அனைவருக்கும் நன்றிகள் பகிர்கிறேன். வாழ்த்துகிறேன்.

“"செல்லும் வழியில் வலிகள் இருந்தாலும்
வெல்லும் வழியில் விதிகள் செய்வோம்”"

நன்றிகளுடன்,
செ.பா.சிவராசன்
09-10-2014
தைக்கள்ளி விளை, மங்கலக்குன்று &அஞ்சல்
கன்னியாகுமரி மாவட்டம் - 629 178
www.vahai.myewebsite.com

----------------------

20-01-2015 அன்று 38வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நூல் வெளியீட்டின் போது செ.பா.சிவராசன் அவர்கள் ஆற்றிய ஏற்புரை.

"அகர முதல எழுத்தெல்லாம்
ஆதிபகவன் முதற்றே உலகு"

தென்னிந்தியாவில் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியின் மேடையை அழகாக்கி உள்ள சான்றோர்க்கும் சான்றோரை வரவேற்க வந்திருக்கும் ஆன்றோர்க்கும் , புத்தகத்தின் கை கோர்க்க அந்த புத்தகம் இந்த புத்தகம் என முடிவெடுக்கும் பணியை செய்துக் கொண்டிருக்கும் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.

இந்த உலகத்திலேயே இதுவரை திரையில் வராத ஒரு கதையை எழுதிவிட வேண்டும் என்ற ஒரேயொரு பேராசைப் பிம்பத்தின் பிரதிபலிப்பு கீதம் பதிப்பகம் என்ற ஆடியின் மூலம் 38-வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நிறைவேறியிருப்பது மிக்க மகிழ்வை அளிக்கிறது. எந்தவொரு படைப்பாளனையும் ஊக்குவிக்கும் ஆற்றல் பெற்றவர் கீதம் பதிப்பத்தின் நிறுவனர் ஞானசி அவர்கள். அவர்களுக்கு இந்த மேடையில் நன்றி உரைப்பதன் மூலம் நான் நிறைவு பெறுகிறேன்.

தமிழே தெரியாத இளைய தலைமுறையினருக்கு , தமிழ் சமுதாயத்தின் "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற கட்டுப்பாடு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மாறி வரும் உலகில் திருமணமில்லாமல் ஒன்றி வாழும் முறை வந்து கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் "ஒருத்தி ஒருவனுக்கு" என்ற நூல் வெளிவர வேண்டியது அவசியம்தான் எனக் கருதுகிறேன்.

கலாச்சாரப்படி தவறானவைகளை, சட்டப்படி சரியாக்க முயல்வது இன்றைய இளம் தலைமுறையினரின் வாழ்க்கை முறையாக மாறி வந்து கொண்டிருக்கிறது. இதற்கு உதாரணம் சமீபத்தில் நடந்த முத்தப் போராட்டம். கலாச்சாரபடி தவறு. ஆனால் நீதிமன்றத்தின் சட்டப்படி சரியாகிவிட்டது. இவ்வாறாக நம் இந்திய நாட்டின் காக்கப்பட வேண்டிய கலாச்சாரங்கள் மறக்கப்படுவதையும் மறக்கப்பட வேண்டிய கலாச்சாரங்கள் காக்கப்படுவதையும் மையமாக வைத்து ஒரு கதாநாயகனை உருவாக்கி அவனுக்குள் பல சோதனைகளைத் திணித்தேன். எழுத்தாளன் பணி செய்யும் பொருட்டு அவன் வாழ்ந்த ஊரின் நிகழ்வுகளைப் பதிவாக்கினேன். என் மனதில் இருந்து வெளியே வந்து அவன் அவனது கடைசி ஆசையைச்சொல்லி என்னிடம் கெஞ்சுவது போன்று எனக்குள் தோன்றியது. அவனது கடைசி ஆசை வேறொன்றும் இல்லை. எவரேனும் ஒருவர் அவனை நல்லவன் என சொல்வதைக் கேட்டு விட்டு உயிர் விட வேண்டும் என்பதுதான். அவனை நல்லவன் என்பதா..? இல்லை கெட்டவன் என்பதா..? என்பதை வாசகர்களின் முடிவுக்கு விட்டுள்ள இந் நாவலை எழில் இலக்கியப் பேரவையின் தலைவர் "திருக்குறள் மாமணி எழில் சோம.பொன்னுசாமி" ஐயா அவர்கள் வெளியிட்டிருப்பது மிகுந்த மகிழ்வைத் தருகிறது. என்னைக் கவிஞராக தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கத்தில் அறிமுகப்படுத்தியப் பெருமை பொன்னுசாமி ஐயா அவர்களையே சாரும்.

இந்த நூலின் முதல் பிரதியினைப் பெற்றுக் கொண்ட கவிஞர் பழனிகுமார் மற்றும் நாகை முகுந்தன் அவர்களுக்கு நன்றிகள் பல. இந்தப் புதினத்தைப் படைத்துக் கொண்டிருக்கும் போதே எனக்குள் ஓர் எண்ணம் தோன்றியது. இந் நூலினை வாசிக்கப்போகும் வாசகர்களுக்கு ஏதேனும் ஒரு நன்மை கிடைக்க வேண்டாமா..என யோசித்தேன். இந் நூலினை மேலோட்டமாக வாசிப்பவர்கள் கூட ஒரு நாள் நாட்டின் முக்கியப் பொறுப்புகளில் பிரதமர் நரேந்திர மோடி ஐயா அவர்களைப் போன்றோ... முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களைப் போன்றோ முக்கிய ஆட்சி பொறுப்புகளில் அமரும்போது இந்த நூலின் கதாநாயகன் கொலை,கொள்ளை,வன்முறை,பாலியல் வன்முறை போன்ற கலாச்சாரச்சீரழிவுகளை முழுவதுமாக நீக்க எந்த முறையைக் கையாண்டானோ .. அவையெல்லாம் அவர்கள் நினைவில் அவர்கள் நினைவுகளை அவர்கள் நினைவுகள் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும்.


நூலினைத் தேர்வு செய்யும் வாசகர்கள் இந்த "ஒருத்தி ஒருவனுக்கு" என்ற நூலையும் சேர்த்து தேர்வு செய்ய வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். இந் நூலினை வாங்காதவர்கள் இந் நூலின் பின்பக்க அட்டையில் அச்சிடப்பட்டுள்ள சில வரிகளைப் படித்து விட்டு உங்கள் மனதில் தோன்றும் பதிலை இப் பிரபஞ்சத்தில் சொல்லாக போட்டு வைத்துக்கொள்ளுங்கள் என அன்பாய் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந் நூலினைப் பற்றி வாழ்த்துரைத்த அனைவர் வாக்கையும் ஏற்று அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.

இந் நூலினை நேசிக்கும் மனங்களோடு வாசித்து ஏற்பார்கள் என உறுதி ஏற்று அனைவருக்கும் நன்றி கூறி ஏற்று ஏற்புரையை நிறைவுச் செய்கிறேன். நன்றி.

------------------------------------------------------------------------------------------------------------------------

 bernadet-kaaviyam.jpg

நூலின்தலைப்பு

பெர்னதெதத் காவியம்

 
 
ஆசிரியர் பெயர்
செ.பா.சிவராசன்
 
 
மொழி
தமிழ்
 
 
முதற்பதிப்பு
2013
 
 
உரிமை
பதிப்பகத்தாருக்கு 
 
 
வெளியீடு

டுடே பதிப்பகம்

984008378 

 
 
நூலின்அளவு
 டெம்மி
 
 
 
 
அச்சுஎழுத்து
11 புள்ளி
 
 
பிரதிகள்
300
 
 
அச்சிட்டோர்

டுடே பிரிண்டர்ஸ்

 
 
விலை
 40 /-

 

ஆசியுரை

புனித பெர்னதெத் வாழ்வால் ஈர்க்கப்பட்டு, புனிதையின் வாழ்வை உணர்வுப்பூர்வமாய் கவி நடையில் எழுதி உரு கொடுத்திருக்கிறார் இந் நூலாசிரியர். அவரின் ஆழ்ந்த வாசிப்பும், ஈடுபாடும் பாராட்டுதற்குரியது. துன்பத்தில் துவண்டு போகாமல் இறைவனைப் பற்றி வாழ்ந்து புனிதையாய் ஆனவளின் வாழ்வு நம்மையும் சிலிர்க்க வைக்கிறது. உலகின் அதிகமாக திருப்பயணிகள் செல்லும் பெர்னதெத் காட்சி கண்ட லூர்து நகரில் நடைபெறும் புதுமைகள் உண்மைதானா..? என்பதை மருத்துவத் துறையைச் சார்ந்த ஏறக்குறைய 500 வல்லுநர்கள் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஆய்வுச் செய்கின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாத பல மருத்துவர்கள் அக் குழுவில் இருந்தபோதிலும், இதுவரை அதிகாரப்பூர்வமாக 68 புதுமைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. பல நூல்களும்,திரைப்படங்களும் புனித பெர்னதெத்தின் பெருமையைப் பறைசாற்றுகின்றன. 1943-ஆம் ஆண்டு வெளியான “த சாங் ஆப் பெர்னதெத்” என்ற ஹாலிவுட் திரைப்படம் 4 ஆஸ்கார் விருதுகளையும் 3 கோல்டன் க்லோபி விருதுகளையும் பெற்றது. லூர்து நகருக்கு வரும் பயணிகளில் பலர் உடலும் உள்ளமும் குணம் பெற்றுச் செல்கின்றனர்.

தூயவள் பெர்னதெத்தின் வாழ்வைக் கவிதை வடிவில் படித்து இன்புறவும், இறை நம்பிக்கையில் மேலும் பலம் பெறவும் இந் நூல் உதவும் என நம்புகிறேன். அருட் சுனையாம் பெர்னதெத்தின் வரலாற்றைக் கூறும் “பெர்னதெத் காவியம்” எனும் நூலினை உலகத் தமிழ் மக்கள் யாவரும் படித்துப் பயனடைய ஆசிக்கின்றேன்.


 ஆசியுடன்..
அருட்பணி ஞா.ஜோசப் ரொமால்டு
பங்குப் பணியாளர்,
புனித பெர்னதெத் தேவாலயம்,
மங்கலக்குன்று.
கன்னியாகுமரி  மாவட்டம்.

 

வாழ்த்துரை

மனிதராய் தோன்றி புனிதரானவர்கள் பலர்.அவ் வகையில் தூயவர் பெர்னதெத்தின் வாழ்க்கை வரலாற்றைக் கவிதையாய் ஆக்கி நூலாக்கம் செய்து பக்தியினைப் பரப்பும் இவ் அரிய முயற்சியினை எமது சங்கத்தின் இளைஞரணிச் செயலாளர் கவிஞர் செ.பா.சிவராசன் அவர்கள் செய்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். கவியரசு கண்ணதாசன் அவர்களின் படைப்பான இயேசு காவியத்திற்கு அடுத்தபடியாக தமிழ் மொழியில் வெளிவரும் கிறிஸ்த்துவ பக்தி இலக்கிய நூலான “பெர்னதெத் காவியம்”இக் காலக் கல்வெட்டு. அதை வெளிக்கொணர்ந்துள்ள கவிஞர் மேலும் பல நூல்களை      வெளியிட்டு வளர வாழ்த்துகிறேன்.

 வாழ்த்துக்களுடன்,

செம்மொழிப் போராளி கவிஞர் க.ச.கலையரசன்
நிறுவனர்/பொதுச்செயலாளர்
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்.

சென்னை - 600 050


முன்னுரைபாவத்தின் வாழ்வு சோகத்தில் விடிய;தேசத்தின் கீழே தேய்ந்து வாழ; பாசத்தின் கை கொண்டு; பாவம் தீர்க்கப் பிறப்பெடுத்து;புனிதப் பாதையில் புதிய தடம் பதித்து; மனித உருவில் சாபக்கேடும் பாவக்கேடும் சாய்த்து;சத்திய மனிதன் நித்திய ஜீவனாய் யுத்தமுமின்றி நித்தமும் வாழ; அமைதியை அள்ளித் தெளிக்கும் ஆனந்தத்தைக் கொளிக்கும் அன்னையாம் பெர்னதெத். இவளால் மனச்சுமைகள் இறக்கப்பட்டு; நம்பிக்கையால் உடல்மனம் பின்னப்பட்டு அருள் பார்வையில் அணைக்கப்பட்டு இருள் வாழ்வு நீக்கப்பட்டு நம்பி வருபவர்கள் உயர்த்தப்பட்டு; நாளெல்லாம் அருள் வழங்கி வாழ்நாளெல்லாம் காக்கும்; அன்னையாம் பெர்னதெத் அவளின் வாழ்வுக் குறிப்பு நூல் நான் எழுத காரணமாய் அமைந்தது அவளின்

ஆசியே..! இந் நூல் அவளைத் தேடும் ஒவ்வொருவருக்கும் வாசலாகுமென நம்புகிறேன்.

    இந் நூல் வெளிவர உதவிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியளிக்கிறேன். மேலும் இக் காவியத்தை நூலாக்கம் செய்து வெளியிட்ட டுடே பதிப்பத்தாருக்கும், வாழ்த்துரைத்த அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள் பல பல.


 நன்றிகளுடன்,
செ.பா.சிவராசன்
www.vahai.myewebsite.com

 

 

 

 

  

pallaviyai-nee-saranamai-naan1-c.p.sivarasan.jpg

--------------------------------------...------------------------------------..--mangalakuntu.jpg

நூல்விவரஅட்டவணை
நூலின்தலைப்பு
பல்லவியாய் நீ ...! சரனமாய் நான்..!
 
 
ஆசிரியர் பெயர்
செ.பா.சிவராசன்
 
 
மொழி
தமிழ்
 
 
முதற்பதிப்பு
2013
 
 
உரிமை
பதிப்பகத்தாருக்கு 
 
 
வெளியீடு

கீதம் பப்ளிகேசன்ஸ் 
3/3,பத்மாவதி அவென்யூ,
பெருங்குடி,சென்னை -96.

Ph: 044 32990231

Cell : 9381033303

 
 
நூலின்அளவு
 டெம்மி 1/8
 
 
தாள்
 18.6 கிகி
 
 
அச்சுஎழுத்து
11 புள்ளி
 
 
பிரதிகள்
600
 
 
அச்சிட்டோர்
வேளாங்கண்ணி பிரிண்டர்ஸ் ,சென்னை 
 
 
விலை
 55 /-
 
 

 

 

 

பொறுத்துக் கொள்பவனுக்கு ஆயுள் அதிகம்
அதிகம் இருந்தென்ன அவதியும் அதிகம்தானே..

வாழ்வதன் பெயரில் சாவது கூட தெரிவதில்லை

சிரிக்கவும் அழவும் பிறந்தவன் மனிதன்...
சிரிக்கிறான்..அழுகிறான்,அழுகிறான் சிரிக்கிறான்
சிரிப்பதா..அழுவதான்னு .. தெரியாமலேயே... - போன்ற வரிகளில் வாழ்வியல்

எவர்க்கும் மரணமே இல்லாமல்
இல்லாமல் நிலாவென்று தனியாய் ஒன்று -போன்ற வரிகளில் அறிவியல் கற்பனை
உதிரங்கள் உன்னுள் சுற்றும் உடல்கள் எல்லாம் உறவாட உயிர்தாங்கும் மண்மகுடம் - போன்ற வரிகளில்ஆற்றுப்படுத்துதல்
வான்முட்டும் மேகமூட்டம் முட்ட முட்ட இடியாகுது
வான் ஊற்று திறப்புவிழா மின்னல் வரவேற்று புகைப்படமாக்குது

நதி ஓடும் கரையோடு உறவாடும் புல்தோட்டம் புல் ஏந்தி விளையாடும் பந்தாட்டும் பனிக்கூட்டம் - போன்ற வரிகளில் இயற்கை
நாம வணங்குற சாமிய எல்லாம் ஒண்ணா சேர்த்தா தாயிதான்.
பறக்க ரெண்டு இறக்க இல்லாட்டா பறவைக்கு ஏது வாழ்வு ஆத்தா ..? பிறக்க ரெண்டு உறவு கொள்ளாட்டா பிறவிக்கு ஏது வாழ்வு சொல்லாத்தா - போன்ற வரிகளில் தாய்மை

எங்கே கிடைக்கும் வாங்க வெற்றியைத் தேடிப் பார்க்கிறேன்
தோல்வியே கிடைத்தால் போதும்-அதில் வெற்றியைக் கொய்து எடுக்கிறேன்

வெற்றி வெற்றி வெற்றி என்று ஓங்கி தட்டு தோல்வி கூட வெற்றியாகிடுமே தோழா சுத்தி சுத்தி நம்பிக்கையால் உன்னைக் கட்டு தோல்வி கூட தோற்று போய் விடுமே தோழா - போன்ற வரிகளில் தன்னம்பிக்கை.

இப்படியாய்..சீர்மிகு சிந்தனைக் கருத்துக்களை கவிதை,பாடல் வடிவில் நயத்துடன் வெளிக்கொணரும் செ.பா.சிவராசன் அவர்கள் தமிழுலகில் கவி விசையைத் தூண்டியவர். தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கத்தின் இளைஞரணிச் செயலாளர். கற்க கசடறக் கணினி,இலவசமாக இணையதளத்தை உருவாக்கிப் பயன்படுத்துவது எப்படி..? சி,சி++,ஜாவா மொழிகளின் பொது வடிவங்கள் எனும் கணினி நூல்கள் மற்றும் விழிகள் தீட்டிய சிற்பி,கவி விசை எனும் கவிதை இ-புத்தகங்களின் ஆசிரியர்.பிரபலதிரைப்பட பாடலாசிரியர் சினேகன்,ப்ரியன் அவர்களின் நட்பில் வளர்ந்து வரும் இக் கவிஞர் சினிமா துறையில் கால் பதிக்கப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.


- K.ஷிஜு,ஸ்ரீ பத்ரா நிவாஸ்,காக்கச்சல்,

மணியங்குழி,கன்னியாகுமரி மாவட்டம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

kanyakumari latest news,kanyakumari districit,kanyakumari,kanyakumari tourist places,c.p.sivarasan, செ.பா.சிவராசன்,  mangalakuntu, Áí¸ÄìÌýÚ, ÒÉ¢¾ ¦À÷ɦ¾ò , bernadet, St. Bernadet's Church, st.bernadet, church in kanyakumari, rc church in kanyakumari , fhÉa« , kaaviyam , kaviyam , Bernadet life poem , kanyakumari poet.