Go to content Go to menu

2010

 

 

 

 

நூல்விவரஅட்டவணை

நூலின்தலைப்பு

கற்ககசடறக்கணிணி

 

 

உள்தலைப்பு

பத்துநாட்களில்கற்ககசடறக்கணிணிஎம்.எஸ்.ஆபீஸ்

 

 

ஆசிரியர் பெயர்

சிவராசன்

 

 

பொருள்

கணிணி - எம்.எஸ்.ஆபீஸ்

 

 

மொழி

தமிழ்

 

 

முதற்பதிப்பு

2010

 

 

உரிமை

ஆசிரியருக்கு

 

 

வெளியீடு

அனுராதாபதிப்பகநிறுவனம் , சென்னை - 600 061.

 

 

நூலின்அளவு

டெம்மி 1X8

 

 

தாள்

16kg

 

 

அச்சுஎழுத்து

13 புள்ளி

 

 

பிரதிகள்

600

 

 

அச்சிட்டோர்

கிளாசிக்பிரிண்டர் சென்னை

 

 

விலை

ரூ . 140 /-

 

 

மொத்தப்பக்கங்கள்

296

  ISBN

 978-81-907491-0-4   

 

இந்த நூல் மாண்புமிகு எஸ்.பி.சற்குணபாண்டியன் , தலைவர் , தமிழ் நாடு மகளிர் ஆணையம் அவர்களால் 31.10.2010 அன்று வெளியிடப்பட்டது
 
CITATION
 
The compilation of this excellent is definitely a boon in the realm of increasing computer literacy amongst the rural Indian population, who cannot invest much into formal education. This not only leads to self employment, but also contributes immensely to the growth of the Nation in terms of employment and Gross National Product .Needless to add, with the recent thrust on the part of Government of India in ensuring financial inclusion by opening bank branches in every nook and corner of the country this look goes a long way in improving the final services in rural areas. The ‘PowerPoint Presentation’ goes a long way in exposing the rural folk to the real time issues confronting all walks of life – be it education, entrepreneurship or industry. In sought the book is highly recommended for an introductory programme in Computer Science and Information Technology.
 
  
 - Dr.K.V.Sundaresan Ph.D.
 
 
 
 
                                        


ஆய்வுரை

வணக்கம்,
மணல்களில் எழுதிய காலம் , ஓலை சுவடிகளில் எழுதிய காலம், தட்டச்சு இயந்திரங்களால் எழுதிய காலங்களைக் கடந்து இன்று நாம் கணிணியில் எழுதும் காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். கணிணியை இயக்க அடிப்படை அறிவை ஒவ்வொருவரும் கற்று தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதை நாம் யாவரும் அறிந்ததே !. கணிணியின் தொடக்க நிலையைப் பயில ஆங்கிலத்தில் பல நூல்கள் வெளிவந்திருப்பினும் தமிழ் வழி படிக்கின்ற அல்லது தமிழ் தெரிந்த பாமரரருக்கு அவைகளைப் பயன்ப்டுத்த முடியவில்லை.அவர்களது பிரச்சினையை தீர்த்து அவர்களும் கணிணியறிவு பெற ஒரு வழி திறக்கப் பட்டுள்ளதாக கருதத் தோன்றுகிறது.


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவரின் குறளில் ஒன்றான ,


கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
                  நிற்க அதற்குத் தக.


                                                 எனும் குறளை நினைவூட்டும் வகையிலும்,

எப்படி கற்க வேண்டும் என்பதற்கு பதில் உரைப்பதாக அமைந்த இக் குறளின் முதல் இரண்டு சீர்களைக் கொண்டு இப் புத்தகத்தின் தலைப்பு அமைக்கப்பட்டுள்ளது.இப் புத்தகம் எதைப் பற்றியது என்பதை அறிய வைக்கும் நோக்கில் கணிணி என்பதை நூலோடு கோர்த்தப் பூவாக " கற்க கசடறக் கணிணி " என்று நூல் பெயர் அமக்கப்படுள்ளது சிறப்பானதே !

பல வண்ன பூக்களால் கோர்த்த பூ மாலையின் ஒவ்வொரு வகைப் பூக்களும் ஒவ்வொரு வகையான வாசனையை வீசுவது போல இந்த நூலிலும் பல்சுவைகள் அமைந்துள்ளன.நூலைத் திறந்து சில பக்கங்களை புரட்டினாலே போதும் , விருந்தினர்க்கு உணவு கொடுத்து உபசரிப்பதைப் போல உங்கள் சிந்தனைக்கு விருந்து கொடுத்து உபசரிக்க வார்த்தைகள் இல்லாமல் இல்லை.

MS Word 2003 ஐ புத்தக வெளியீட்டு விழா என்ற தலைப்பில் உரையாற்றுவதாக அமைத்து , அந்த உரையில் MS Word 2003 பற்றிய செய்திகளை சொல்லியிருப்பது எளிதில் மனதில் புரியும் படியாக உள்ளது.

Ms Word -ல் Standard Toolbar,Formating Toolbar களைப் பட்டியலிட்டு காட்டியிருப்பது படிப்பவர்க்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.மேலும், விளக்கப் படங்கள் மூலம் விளக்கியிருப்பதால் படத்தைப் பார்த்தே படிக்கும் திறனை வளர்ப்பதற்குக் கூட ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்.இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை "கனவு காணுங்கள் " எனக் கூறி உற்சாகப்படுத்தி நமது நாட்டை வல்லரசுப் பதைக்கு அழைத்து செல்லும் முன்னாள் குடியரசுத் தலைவர் Dr.A.P.J.அப்துல் கலாம் அவர்களின் புகைப்படங்களை அங்காங்கே இடம் பெற செய்திருப்பது , அவரை சிறப்பிக்கும் ஓர் உத்தியாக நான் கருதுகிறேன்.

MS Word -ல் Auto Text ஐ விளக்க, fail என்று type செய்து spacebar ஐ தட்டினால் pass pass என மாறும் எனக் கூறியதோடு நிறுத்தியிருக்கலாம். அதோடு நிறுத்தாமல் ஒரு தோல்வி இரண்டு வெற்றிக்கு பலம் எனக் கூறியிருப்பது மற்றும் இது போன்ற செய்திகளை நூல் முழுமையும் ஆங்காங்கே இடம்,பொருள்,ஏவல் அறிந்து விளக்கியிருப்பது இன் நூலுக்கு பலம் எனக் கருதுகிறேன்.MS Word 2003 முழுவதையும் விளக்கியிருக்கலாம். 

MS Excel 2003 முழுவதையும் விள்க்கியிருப்பது தனித் தன்மை வாய்ந்த்ததாக உள்ளது.MS Excel 2003 ஐப் பல Application களை உருவாக்கி விளக்கியிருப்பது இன்னும் பல Application களை உருவாக்க ஊன்றிய விதையென எண்ணத் தோன்றுகிறது.MS Excel 2003 ஐப் பயன்படுத்தும் போது பொதுவாக ஏற்படும் தவறுகளை சுட்டிக் காட்டி பிரச்சினைகளுக்கேற்ற தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக ,
பட்டமளிப்பு விழா என்ற தலைப்பில் மாணக்கர்களின் பட்டியலை Sort செய்யும் போது தவறு எப்படி நேர்ந்த்து ? அந்த தவறை எப்படி சரி செய்தார்கள் என்றும், கடவுள் என்ற தலைப்பில், Freez Panes இல்லாமல் இருந்ததால் என்ன பிரச்சினை வந்தது ? அந்த பிரச்சினையை எப்படி தீர்த்தார்கள் என்றும் ஓசை என்ற தலைப்பில் ஊக்கத் தொகையில் எழுந்த பிரச்சினை ,அதை Scenarios மூலமாகத் தீர்வு செய்த விதம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

Chart ஐ Create செய்யும் விதம் பற்றி எழுதியிருப்பினும்,முழுமைப்படுத்தியிருக்கலாம். Tittle மற்றும் Range களைக் கொடுப்பது என்று இன்னும் சிலவற்றை விளக்கியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.தமிழிலேயே உதாரணங்களைக் கொடுத்திருப்பதால் நாமும் தமிழிலேயே எளிதாக MS Excel 2003 ஐ பயன்படுத்த முடியும் என்ற நம்பிகை ஏற்படுகிறது.எளிய நடையில் இருப்பதால் ஓரளவு ஆங்கிலம் தெரிந்த சிறு வியாபாரிகள் கூட நூலைப் படித்து அவர்களின் தேவைகளுக்கேற்றவாறு Bill ,Voucher களைத் தயாரிக்க முடியும் என்று உறுதியளிக்கிறேன்.

Ms Powerpoint 2003 முழுதும் கவிதை வடிவம் பெற்றுள்ளது.கவிதையாய் Ms Powerpoint யா ! என வியக்க வைக்கிறது.கணிப்பொறியை கற்றுக் கொடுக்க முன் எந்த நூலும் கவிதை வடிவில் வெளிவரவில்லை என்பதை எண்ணுகையில், இது புதிய முயற்சியாக உள்ளது.கூட்டுக் குடும்பத்தில் தாத்தா,பாட்டி,பெரியப்பா,பெரியம்மா,சித்தி,சித்தப்பா,அண்ணன்,அண்ணி ,தங்கை என்று கூட்டாக வாழ்ந்து செழித்த குடும்பங்கள் இன்று அவசரயுகத்தாலும்,வாழ்வின் போக்காலும்,பிரிவுற்று சிறு சிறு குடும்பங்களாக மாறி வாழ்ந்துக் கொண்டிருக்கும் வேளையில் தாத்தாவுக்கு பேரன் கடிதம் எழுதுவதை கதைத் தளமாக வைத்து கதா நாயகனை கற்பனையில் வாங்கி உலக நடப்போடு கவிதைகளையும் ,Powerpoint தகவல்களையும் பிணைத்து இணைத்திருக்கும் விதம் நன்றாக உள்ளது.Presentation களை உருவாக்கத் தேவையான அனைத்தும் விளக்கப் பட்டுள்ளது.மேலும் Presentation களை எளிதாக உருவாக்க Shortcut Keys களையும் பட்டியலிட்டு விளக்கப் பட்டுள்ளது. அதோடு நின்று விடாமல் இருபத்தேழு Slide களின் படங்களையும்,அதன் பெயர்களையும்,பயன்களையும் பட்டியலிட்டு விளக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஒன்பது ரகசியங்களை அறிமுகப்படுத்தி அதை Powerpoint க்குத் தொடர்பு படுத்தியிருப்பது ஒன்பது ரகசியங்களைப் படித்து அந்த ரகசியத்தோடு தொடர்புடைய கருத்துக்களை நினைவில் வைத்துக் கொண்டாலே போதும், Presentation ஐ தாமாகவே உருவாக்கி கொள்ளலாம்

.உதாரணமாக 

முதல் ரகசியமாக கூறியிருக்கும்,
"கருவிகளைக் கொண்டு வா
காரியத்தை செய்யலாம் "
இது Toolbar ல் உள்ள Tools களை விவரிக்கிறது.

எவையேனும் , ஏதையேனும் அசைக்கும் போதுதான் 
அதனுள் இருக்கின்ற சக்தி
மகத்துவம் காண்கிறது
என்ற நான்காம் ரகசியம் Slide Transition ஐ விவரிக்கிறது.

பார்வை என்பது கோர்வை
கண் பார்த்து கோர்ப்பது
மனம் பார்த்து பார்ப்பது
என்ற எட்டம் ரகசியம் எல்லா Slide களையும் ஒரே முறையில் பார்க்கப் பயன்படும் Slide Sorter ஐ விவரிக்கிறது.

இவ்வாறாக ரகசியத்தை வைத்தே எளிதாக நம் மனதுக்குள் Powerpoint ஐ நிறுத்திக் கொள்ள முடிகிறது.

உயரே போகின்றவனுக்கு 
சறுக்கல்கள் அதிகம்,
காயங்கள் அதிகம்,
பிறரால் பூசப்படும்,
சாயங்கள் அதிகம்,
பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்,
வெறுத்துக் கொள்ளக் கூடாது


என்றும்,
பொறுத்துக் கொள்பவனுக்கு 
ஆயுள் அதிகம்,
அதிகம் இருந்தென்ன
அவதியும் அதிகம் தானே !
என்றும், 
எழுதியுள்ள வரிகள் அனைவருடைய வாழ்க்கையோட்டத்திற்கும் பொருத்தமானவைகளாகத்தான் இருக்கும். 

 


MS Access ல் table ஐ Create செய்யத் தேவையான Datatype களையும் விளக்கி , Table, Form,Pages,Reports போன்றவைகளை உருவாக்கவும் விளக்கப்பட்டுள்ள கதைகள் குழந்தை மாணவர்களுக்காக இருப்பினும்,எவர்க்கும் எளிதாக புரியும் படி உள்ளது.புரிந்து கொள்ளுதலும்,விட்டுக் கொடுத்தலும் இல்லாதவர் வாழ்வு பிரிவு படுகிறது என்ற தத்துவக் கதை வாழ்வை செறிவூட்டுவதாக அமைந்துள்ளது.

இந் நூலை முழுமையாகப் படித்த பிறகு சிறு சிறு Application களை மாணவர்கள் சிறு வெயதிலேயே உருவாக்கக் கூடும்.அதற்கேற்றவாறு விளக்கங்கள் படங்கள் மூலமாகவும்,கதைகள் மூலமகவும் விவரிக்கப்பட்டுள்ள நூலாக "கற்க கசடறக் கணிணி " என்ற நூல் அமைந்துள்ளது. இந் நூலைப் படித்த பின் க்ணிணி அறிவை தாய் மொழியில் பெற்றுவிட்ட புத்துணர்சியை நாம் ஒவ்வொருவரும் பெறக்கூடும்.

 

முனைவர் இ.கமலநாபன் . பி.எச்.டி துணை முதல்வர் 
வேல்டெக் Dr.RR & Dr.SR தொழில்நுட்ப பல்கலைக் கழகம்
ஆவடி.