Go to content Go to menu

2011

 

ilavasamaka-inaiyathalthai-uruvaakki-payanpaduththuvathu-eppadi-by-c.p.sivarasan---geeetham-publications.png

 

 

 

 

 

 

 

 

 

நூல்விவரஅட்டவணை

நூலின்தலைப்பு

இலவசமாக இணையதளத்தை உருவாக்கிப் பயன்படுத்துவது எப்படி?

 

 

ஆசிரியர் பெயர்

செ.பா.சிவராசன்

 

 

மொழி

தமிழ்

 

 

முதற்பதிப்பு

2011

 

 

உரிமை

பதிப்பகத்தாருக்கு

 

 

வெளியீடு

கீதம் பப்ளிகேசன்ஸ் 
3/3,பத்மாவதி அவென்யூ,
பெருங்குடி,சென்னை -96.

 

 

நூலின்அளவு

 டெம்மி 1/8

 

 

தாள்

 11.6 கிகி

 

 

அச்சுஎழுத்து

12 புள்ளி

 

 

பிரதிகள்

600

 

 

அச்சிட்டோர்

டுடே பிரிண்டர்ஸ்,சென்னை -5

 

 

விலை

 100 /-

 

 

மொத்தப்பக்கங்கள்

94

 

 

 

 
 
 
 
 
   
 
 
திரு.பா.விசு M.E.(Ph.D)
துறைத் தலைவர்,
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை.
வேல்டெக் Dr.RR & Dr.SR தொழில் நுட்ப பல்கலைக் கழகம்
ஆவடி.
சென்னை- 600 062.
 
 
 
 
ஆய்வுரை
 
 
இயன்ற அளவிற்கு மிகப்பலரது கவனங்களை ஈர்த்து, தனித்த அடையாளங்களோடு தன்னை வெளிப்படுத்த நினைக்கும் நவீனமான இளைஞர்களில் சட்டென்று என் நினைவுக்கு வருபவர் நண்பர் செ.பா.சிவராசன்.அவருடைய முந்தைய நூல் "கற்க கசடறக் கணிணி" மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற மிகச்சிறந்த நூல். வேல்டெக் தொழில் நுட்ப பல்கலைக் கழகம் இவருக்கு "சிறந்த ஆசிரியர் 2010 ' விருதையும் வழங்கி பாராட்டியது. அவருடைய அடுத்தப் படைப்பு " இலவசமாக இணையதளத்தை உருவாக்கிப் பயன்படுத்துவது எப்படி..? இந்த நூலினைக் கொடுத்து இந் நூலினை நீங்கள்தான் ஆய்வு செய்ய வேண்டும்.அதை உரையாக்க வேண்டும் என என்னிடம் கூறிய போது மகிழ்ச்சியைக் காட்டிலும் வியப்புதான் மேலிட்டது.காரணம் "இலவசமாக இணையதளத்தை உருவாக்கிப் பயன்படுத்துவது எப்படி? " என்ற தலைப்பு. இலவச அரிசிதான் இதுவரை பிரபலம். எனிவரும் காலங்களில் இலவச இணையதளங்கள் பிரபலமாகக் கூடும். அதற்கு இந் நூல் விதையாகும் என்றெண்ணுகின்றேன். ஒவ்வொரு நூலையும் எளிய முறையில் உரை நடை வடிவில் எடுத்துக்காட்டோடு விளக்குவது இவரது தனிச்சிறப்பு. 
 
புதுமையும், மொழி செழுமையும் கொண்ட இந் நூலினை ஆய்வு செய்ய பலமுறைப் படிக்க நேர்ந்தது. பல பகுதிகளை இந் நூலின் உதவியினால் செய்துப்பார்த்து தெரிய வேண்டியிருந்தது. கைபேசி பிரபலமாகிவிட்ட இத்தருணத்தில் இணையதளங்களைப் பார்க்கின்ற (அ)உபயோகிக்கின்ற வசதியும் கைபேசிகளில் வெளிவந்து பிரபலமடைந்துக் கொண்டிருக்கும் இவ் விஞ்ஞான உலகில்,இலவசமாக இணையதளத்தை உருவாக்கிப் பயன்படுத்த முயற்சிகளை வெளிக்கொணர்ந்துள்ள இந் நூலின் மூலம் விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் ,தொழில் நுட்பத்தின் புதிய பரிணாமத்தை தோற்றுவிக்கப் போகின்றன என்பது உண்மை.சிறு குழந்தைகளின் கைகளைப் பிடித்து அ,ஆ,இ,ஈ...எழுதக் கற்றுக் கொடுப்பதைப் போன்று இணையதளத்தை அமைப்பதற்கான வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இணையதளங்களும் எவ்வளவு memory space - ஐ வழங்குகிறது என அலசி ஆராய்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 
அறிவியல் என்பது கண்டுபிடிப்புகளால் மட்டுமே வளர்ச்சி அடைந்து விடுவதில்லை. அவைகளைப் பயன்படுத்தும் போதுதான் அறிவியல் வளர்ச்சியடைகின்றது. இதற்கேற்றவாறு அரிய அறிவியல் நுட்பங்களை அலசி ஆராய்ந்து கல்வி அறிவில் இளையோருக்கும் பயன்படும் படியாக எளிய தமிழில் உருவாக்கி எவர் எவரெல்லாம் எந்தெந்த தேவைகளுக்காக இலவசமாக இணைய தளத்தை உருவாக்கிப் பயன்படுத்தலாம் என்ற யோசனையையும் கூறி சிந்தனையைத் தூண்டியுள்ளார் நெருப்பால் தூண்டிய மெழுகைப் போன்று.இந் நூலினைப் படிக்கும் போதே நாமும் ஓர் இணையதளத்தை இலவசமாக உருவாக்கியே ஆகவேண்டும் என்ற பேராவல் அனைவருக்கும் தோன்றக் கூடும்.இது போன்ற புத்தகங்கள் எந்த மொழியிலும் இதுவரை வெளிவந்ததில்லை. செ.பா.சிவராசனின் நூல் என்றாலே கவிதை இருக்குமே என யூகித்தேன். எனது யூகம் சரியாகவே இருந்தது. விஞ்ஞானத்தை ஒன்றாக்கி ....பூமியை இரண்டாக்கலாம் என எழுதியுள்ள கவிதையில் இறுதி வரியில் ஏனெனில் நீங்களும் படைக்கத் தொடங்கிவிட்டீர்கள் என எழுதியுள்ள வரிகள் இந் நூலைப் படிப்பவர் ஒவ்வொருவரையும் கை கொடுத்துப் பாராட்டுவது போன்ற வரிகள். அறிவியலின் துணைக் கொண்டு சிந்திக்கவும், ஆய்வுச்செய்யவும் இந் நூல் பழக்கப்படுத்தும் என்று நம்பிக்கைக் கொண்டுள்ளேன்.
 
நிரந்தரமாகத் தகவல்களை Backup செய்து வைத்துக் கொள்வதற்கு Skydrive-ஐ இந் நூலில் அறிமுகப்படுத்தியுள்ள ஆசிரியருக்கு எத்தனை விருதுகள் கொடுத்தாலும் தகும்.
 
இலவசமாக இணையதளத்தை உருவாக்கிப் பயன்படுத்துவது எப்படி ? என்ற நூலினை கணினி சமுதாயத் தளிர்களின் அறிவாற்றல் தளைத்திட அரிய கருவூலமாகப் படைத்துள்ள அருமை நண்பர் செ.பா.சிவராசன் அவர்களைப் பெரிதும் பாராட்டுகிறேன். இப் பணியில் அவருக்குத் துணை நின்ற நண்பர்களுக்கு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக!. இந் நூல் கிராமங்களைத் தாண்டி குக்கிராமங்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே ஆவல்.
 
 
முன்னுரை
 
 
சூரியனிடமிருந்துச் சிதறியத் துண்டு எரிந்தும் அணைந்தும் குளிர்ந்தும்..தண்மையும் வெம்மையும் தாக்க தாக்க தன்மை மாறி மண்ணாய் மாறிய மாற்றங்கள் நடந்தது சூரியக் குடும்ப விஞ்ஞானத்தில். புல் பூண்டு முளைத்து உருவெடுத்து உயிரெடுத்து உயிரியாய் பூச்சியாய் குரங்காய் மனிதனாய் மாறியது பூமி விஞ்ஞானத்தில். அறிய அறிய அறிய அறிவாய் அறிவை வகுத்து வகுத்து அதைப் பகுத்து பகுத்து பகுத்து 1,2,3,4,5,6 என அறிவை ஆறாக்கினான். அவனைப் பத்திரப் படுத்திக் கொள்ள அறிவைக் கருவியாக மாற்றியும் விட்டான்.இவை கற்காலத்து விஞ்ஞானத்தில். புலப்படாத சக்தியினை உணர்ந்து உணர்ந்து உணர்ந்து உரைத்த போதே மனிதன் ஏழாம் அறிவையும் பெற்று விட்டான். வானமே எல்லை என்றெண்ணிக் கொண்டிருந்தவன் நிலவில் இடமும் பிடிக்கத் தொடங்கி விட்டான். இணையதளங்கள்..இது வளர்ந்த விஞ்ஞானத்தை மேலும் வளரச்செய்யும் வானலை விஞ்ஞானம். இதைப்பற்றி நாம் ஒவ்வொருவரும் அறிந்துக்கொள்ளும் போது நமது தேசத்தை அறிவியலால் வளமானதாக வலுப்படுத்திக் கொள்கிறோம் என்பதில் ஐயமிருக்க முடியாது. இனி வரும் காலங்களில்,
 
விஞ்ஞானத்தை ஒன்றாக்கி...
பூமியை இரண்டாக்கலாம்
மனிதனை மூன்றாக்கலாம் 
மூர்த்தியை நான்காக்கலாம்.
வேதத்தை ஐந்தாக்கலாம் 
பூதத்தை ஆறாக்கலாம்
அறிவை ஏழாக்கலாம்
லோகங்களை எட்டாக்கலாம்
திசைகளை ஒன்பதாக்கலாம்
கிரகங்களை பத்தாக்கலாம்
ஏனெனில் ....
படைக்கத் தொடங்கி விட்டது
இயற்கை மட்டுமல்ல
நீங்களும்தான்.... 
 
 
குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற மனிதன், குகைகளில் வாழத் தொடங்கிய கற்காலம் முதல் இன்று வரை அவனோடு தொடர்ந்து வந்து கொண்டிருப்பதில் விளம்பர நோக்கும் ஒன்று. அவன் வாழும் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் வருங்கால சந்ததியினரும் அறிய வேண்டும் என விரும்பிய அவன் கற் சிற்பங்களையும், ஓவியங்களையும் தீட்டினான். அறிவியலின் வளர்சிக்கேற்ப விளம்பர யுக்தியையும் மாற்ற மறந்துவிடவில்லை. கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள் என பயணித்த விளம்பர யுக்தி அறிவியலின் வளர்ச்சியினால் செய்தித் தாள்கள், புத்தகங்கள் மூலமாக வளர்ந்த விளம்பர யுகம் மீண்டும் அறிவியல் வளர்ச்சி மாற்றத்தினால் இன்னும் ஒரு படி மேலாக வானொலி, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் பேனர்களாலும் ஒருபுறம் வளர்ச்சியடைந்து வரினும், மறுபுறம் இதையும் தாண்டி இணையதளம் மூலமாகவே தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது. இணையதள உலகில் பயணிக்கும் இன்றைய இளைய தலைமுறைகள் விளம்பரங்களை இனையதளம் மூலமாக அறிமுகம் செய்துக் கொள்வது மட்டுமின்றி இணையதளம் மூலமாக வியாபாரத்தையும் செய்து இலாபத்தையும் ஈட்டி வருகின்றனர். மிகப் பெரிய நிறுவனங்கள் அதிக பொருட் செலவு செய்தும்,தனி மனிதர்கள் அவர்களின் வசதி வாய்ப்புகளுக்கேற்றவாறு பணம் செலவளித்தும் இணயதளங்ககளை அமைத்துக் கொள்கின்றார்கள். உலகில் எந்த மூலையில் உள்ளவராய் இருப்பினும் நம்மைப் பற்றி பிறர் அறிந்து கொள்ள நமக்கும் ஒரு இணையதளம் இருந்தால் எப்படியிருக்கும் முகவரியை எழுதும் இடங்களிலெல்லாம் இணையதள முகவரியை எழுதி அசத்தலாமே !... கற்பனை செய்துப் பார்க்கும் போதே பிரமாண்டமாக இருக்கிறது. இந்த பிரமாண்டத்தைத் தான் நீங்களாகவே நீங்கள் விரும்பியபடி இந் நூலைப் பயன்படுத்தி உருவாக்கப் போகின்றீர்கள். நம்ப முடியவில்லையா ? அதிக பணம் தேவையாகுமே என்று வருந்துகின்றீர்களா..? வீண் வருத்தத்தை விட்டு விடுங்கள். முற்றிலும் இலவசம்தான்.
 
சில இணையதளங்கள் முற்றிலும் இலவசமாக இணையதளத்தை உருவாக்கும் வசதியைத் அமைத்து தந்துள்ளது. அவ் இணையதளத்திற்குள் சென்று நாம் விரும்பியபடி நாமாகவே நமக்கு ஒர் இணையதளத்தை உருவாக்கிப் பயன்படுத்த முடியும். இணையதளத்தை ஆங்கிலத்தில் அமைப்பதை விட தமிழில் அமைப்பதால் பார்ப்பவரை விரைவாக கவருவதுடன் பாமரரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். இன்று அதிக இணையதளங்கள் தமிழ் மொழியிலேயே உலாவந்து கொண்டிருக்கிறது. தமிழ் மொழியை வளர்ப்பதற்காக அரசு சார்ந்த அமைப்புகளோடு தமிழ் பற்றுள்ள கவிஞர்கள், எழுத்தாளர்கள், மேடைப் பேச்சாளர்கள் போன்றோர் பலர் இருப்பினும் இவர்களோடு தாங்களும் தமிழ் மொழியில் இலவச இணைய தளத்தை உருவாக்குவதன் மூலம் தமிழுக்கு தொண்டாற்ற முடியும் என நம்புகிறேன்.
 
மேலும் இந்நூல் சிறப்புற உரைகளை வழங்கிய அருள்பணி. வெ.சாகாய ஜஸ்டஸ் M.A.,M.Phil.,M.Th.தாளாளர்-புனித பெர்னதெத் மேனிலைப் பள்ளி, மங்கலக்குன்று அவர்களுக்கும், திரு.பா.விசு M.E.,(Ph.D) துறைத்தலைவர், கணினி அறிவியல் துறை, வேல்டெக் Dr.RR & Dr.SRதொழில் நுட்ப பல்கலைக் கழகம், ஆவடி அவர்களுக்கும், செம்மொழிப்போராளி.கவிஞர்.க.ச.கலையரசன், ஆசிரியர்-கவிஞர் குரல் மாத இதழ், எண்-1.நேரு நகர்,மண்ணூர்பேட்டை,சென்னை-600050 அவர்களுக்கும், திருக்குறள் மாமணி.எழில். சோம. பொன்னுசாமி (தமிழ் குடில்,எண்.17,சரசுவதி நகர், ஆவடி, சென்னை-55) அவர்களுக்கும், இதைப் புத்தகமாக்க உதவிய திரு.செல்வராஜ் (அரசுப் பேருந்து நடத்துனர், பாலவிளை,குமரி மாவட்டம்) திரு. ச. சந்தோஸ்குமார்(சிங்கப்பூர்), திரு. கு.வில்சன் (அரசுப்பேருந்து ஓட்டுனர், பரைக்காணி, குமரி மாவட்டம்) திரு.ரா.ஆல்பன் , ரா.மோகன் (பாகோடு) இணையதள வசதியோடு கணினி வசதியை மடிக்கணினியை தந்து உதவிய செல்வன்.த.லால் (பாகோடு, குமரி மாவட்டம் ) மற்றும் மிகச்சிறந்த முறையில் நூலாக்கம் செய்து வெளியிட்ட கீதம் பதிப்பகத்தாருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
 
தாய் மொழியாம் தமிழுக்கும், தமிழைக் கற்றுத் தந்த என் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்த நூல் வழியாக நன்றி கூறுவதில் பெருமித மகிழ்சியடைகிறேன். இந்த நூலினை வாங்கி பயன்படுத்தும் உங்களை நண்பராகப் பெற்ற பாக்கியப் பூரிப்பில் வழி செய்த இறைவனைப் போற்றுகிறேன்.
 
 
அன்புடன்,
செ.பா.சிவராசன்.