Go to content Go to menu

2013

bernadet-kaviyam-by-c.p.sivarasan--mangalakuntu.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நூலின்தலைப்பு

பெர்னதெதத் காவியம்

 

 

ஆசிரியர் பெயர்

செ.பா.சிவராசன்

 

 

மொழி

தமிழ்

 

 

முதற்பதிப்பு

2013

 

 

உரிமை

பதிப்பகத்தாருக்கு 

 

 

வெளியீடு

டுடே பதிப்பகம்

984008378 

 

 

நூலின்அளவு

 டெம்மி

 

 

 

 

அச்சுஎழுத்து

11 புள்ளி

 

 

பிரதிகள்

300

 

 

அச்சிட்டோர்

டுடே பிரிண்டர்ஸ்

 

 

விலை

 40 /-

 

ஆசியுரை
புனித பெர்னதெத் வாழ்வால் ஈர்க்கப்பட்டு, புனிதையின் வாழ்வை உணர்வுப்பூர்வமாய் கவி நடையில் எழுதி உரு கொடுத்திருக்கிறார் இந் நூலாசிரியர். அவரின் ஆழ்ந்த வாசிப்பும், ஈடுபாடும் பாராட்டுதற்குரியது. துன்பத்தில் துவண்டு போகாமல் இறைவனைப் பற்றி வாழ்ந்து புனிதையாய் ஆனவளின் வாழ்வு நம்மையும் சிலிர்க்க வைக்கிறது. உலகின் அதிகமாக திருப்பயணிகள் செல்லும் பெர்னதெத் காட்சி கண்ட லூர்து நகரில் நடைபெறும் புதுமைகள் உண்மைதானா..? என்பதை மருத்துவத் துறையைச் சார்ந்த ஏறக்குறைய 500 வல்லுநர்கள் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஆய்வுச் செய்கின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாத பல மருத்துவர்கள் அக் குழுவில் இருந்தபோதிலும், இதுவரை அதிகாரப்பூர்வமாக 68 புதுமைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. பல நூல்களும்,திரைப்படங்களும் புனித பெர்னதெத்தின் பெருமையைப் பறைசாற்றுகின்றன. 1943-ஆம் ஆண்டு வெளியான “த சாங் ஆப் பெர்னதெத்” என்ற ஹாலிவுட் திரைப்படம் 4 ஆஸ்கார் விருதுகளையும் 3 கோல்டன் க்லோபி விருதுகளையும் பெற்றது. லூர்து நகருக்கு வரும் பயணிகளில் பலர் உடலும் உள்ளமும் குணம் பெற்றுச் செல்கின்றனர்.

தூயவள் பெர்னதெத்தின் வாழ்வைக் கவிதை வடிவில் படித்து இன்புறவும், இறை நம்பிக்கையில் மேலும் பலம் பெறவும் இந் நூல் உதவும் என நம்புகிறேன். அருட் சுனையாம் பெர்னதெத்தின் வரலாற்றைக் கூறும் “பெர்னதெத் காவியம்” எனும் நூலினை உலகத் தமிழ் மக்கள் யாவரும் படித்துப் பயனடைய ஆசிக்கின்றேன்.

 
ஆசியுடன்..

அருட்பணி ஞா.ஜோசப் ரொமால்டு
பங்குப் பணியாளர்,
புனித பெர்னதெத் தேவாலயம்,
மங்கலக்குன்று.
கன்னியாகுமரி  மாவட்டம்.வாழ்த்துரை

மனிதராய் தோன்றி புனிதரானவர்கள் பலர்.அவ் வகையில் தூயவர் பெர்னதெத்தின் வாழ்க்கை வரலாற்றைக் கவிதையாய் ஆக்கி நூலாக்கம் செய்து பக்தியினைப் பரப்பும் இவ் அரிய முயற்சியினை எமது சங்கத்தின் இளைஞரணிச் செயலாளர் கவிஞர் செ.பா.சிவராசன் அவர்கள் செய்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். கவியரசு கண்ணதாசன் அவர்களின் படைப்பான இயேசு காவியத்திற்கு அடுத்தபடியாக தமிழ் மொழியில் வெளிவரும் கிறிஸ்த்துவ பக்தி இலக்கிய நூலான “பெர்னதெத் காவியம்”இக் காலக் கல்வெட்டு. அதை வெளிக்கொணர்ந்துள்ள கவிஞர் மேலும் பல நூல்களை      வெளியிட்டு வளர வாழ்த்துகிறேன்.

 
வாழ்த்துக்களுடன்,

செம்மொழிப் போராளி கவிஞர் க.ச.கலையரசன்
நிறுவனர்/பொதுச்செயலாளர்
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்.
சென்னை - 600 050

முன்னுரை


பாவத்தின் வாழ்வு சோகத்தில் விடிய;தேசத்தின் கீழே தேய்ந்து வாழ; பாசத்தின் கை கொண்டு; பாவம் தீர்க்கப் பிறப்பெடுத்து;புனிதப் பாதையில் புதிய தடம் பதித்து; மனித உருவில் சாபக்கேடும் பாவக்கேடும் சாய்த்து;சத்திய மனிதன் நித்திய ஜீவனாய் யுத்தமுமின்றி நித்தமும் வாழ; அமைதியை அள்ளித் தெளிக்கும் ஆனந்தத்தைக் கொளிக்கும் அன்னையாம் பெர்னதெத். இவளால் மனச்சுமைகள் இறக்கப்பட்டு; நம்பிக்கையால் உடல்மனம் பின்னப்பட்டு அருள் பார்வையில் அணைக்கப்பட்டு இருள் வாழ்வு நீக்கப்பட்டு நம்பி வருபவர்கள் உயர்த்தப்பட்டு; நாளெல்லாம் அருள் வழங்கி வாழ்நாளெல்லாம் காக்கும்; அன்னையாம் பெர்னதெத் அவளின் வாழ்வுக் குறிப்பு நூல் நான் எழுத காரணமாய் அமைந்தது அவளின் ஆசியே..! இந் நூல் அவளைத் தேடும் ஒவ்வொருவருக்கும் வாசலாகுமென நம்புகிறேன்.

    இந் நூல் வெளிவர உதவிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியளிக்கிறேன். மேலும் இக் காவியத்தை நூலாக்கம் செய்து வெளியிட்ட டுடே பதிப்பத்தாருக்கும், வாழ்த்துரைத்த அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள் பல பல.

 நன்றிகளுடன்,
செ.பா.சிவராசன்
www.vahai.myewebsite.com

 

 

pallaviyai-nee-saranamai-naan-by-c.p.sivarsan---geetham-publications--------.------.------------------------.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நூல்விவரஅட்டவணை

நூலின்தலைப்பு

பல்லவியாய் நீ ...! சரனமாய் நான்..!

 

 

ஆசிரியர் பெயர்

செ.பா.சிவராசன்

 

 

மொழி

தமிழ்

 

 

முதற்பதிப்பு

2013

 

 

உரிமை

பதிப்பகத்தாருக்கு 

 

 

வெளியீடு

கீதம் பப்ளிகேசன்ஸ் 
3/3,
பத்மாவதி அவென்யூ,
பெருங்குடி,சென்னை -96.

Ph: 044 32990231

Cell : 9381033303

 

 

நூலின்அளவு

 டெம்மி 1/8

 

 

தாள்

 18.6 கிகி

 

 

அச்சுஎழுத்து

11 புள்ளி

 

 

பிரதிகள்

600

 

 

அச்சிட்டோர்

வேளாங்கண்ணி பிரிண்டர்ஸ் ,சென்னை 

 

 

விலை

 55 /-

 

 

 

“பொறுத்துக் கொள்பவனுக்கு ஆயுள் அதிகம்
அதிகம் இருந்தென்ன அவதியும் அதிகம்தானே..

வாழ்வதன் பெயரில் சாவது கூட தெரிவதில்லை

சிரிக்கவும் அழவும் பிறந்தவன் மனிதன்...
சிரிக்கிறான்..அழுகிறான்,அழுகிறான் சிரிக்கிறான்
சிரிப்பதா..அழுவதான்னு .. தெரியாமலேயே... - போன்ற வரிகளில் வாழ்வியல்

எவர்க்கும் மரணமே இல்லாமல்
இல்லாமல் நிலாவென்று தனியாய் ஒன்று -போன்ற வரிகளில் அறிவியல் கற்பனை
உதிரங்கள் உன்னுள் சுற்றும் உடல்கள் எல்லாம் உறவாட உயிர்தாங்கும் மண்மகுடம் - போன்ற வரிகளில்ஆற்றுப்படுத்துதல்
வான்முட்டும் மேகமூட்டம் முட்ட முட்ட இடியாகுது
வான் ஊற்று திறப்புவிழா மின்னல் வரவேற்று புகைப்படமாக்குது

நதி ஓடும் கரையோடு உறவாடும் புல்தோட்டம் புல் ஏந்தி விளையாடும் பந்தாட்டும் பனிக்கூட்டம் - போன்ற வரிகளில் இயற்கை
நாம வணங்குற சாமிய எல்லாம் ஒண்ணா சேர்த்தா தாயிதான்.
பறக்க ரெண்டு இறக்க இல்லாட்டா பறவைக்கு ஏது வாழ்வு ஆத்தா ..? பிறக்க ரெண்டு உறவு கொள்ளாட்டா பிறவிக்கு ஏது வாழ்வு சொல்லாத்தா - போன்ற வரிகளில் தாய்மை

எங்கே கிடைக்கும் வாங்க வெற்றியைத் தேடிப் பார்க்கிறேன்
தோல்வியே கிடைத்தால் போதும்-அதில் வெற்றியைக் கொய்து எடுக்கிறேன்

வெற்றி வெற்றி வெற்றி என்று ஓங்கி தட்டு தோல்வி கூட வெற்றியாகிடுமே தோழா சுத்தி சுத்தி நம்பிக்கையால் உன்னைக் கட்டு தோல்வி கூட தோற்று போய் விடுமே தோழா - போன்ற வரிகளில் தன்னம்பிக்கை.

இப்படியாய்..சீர்மிகு சிந்தனைக் கருத்துக்களை கவிதை,பாடல் வடிவில் நயத்துடன் வெளிக்கொணரும் செ.பா.சிவராசன் அவர்கள் தமிழுலகில் கவி விசையைத் தூண்டியவர். தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கத்தின் இளைஞரணிச் செயலாளர். கற்க கசடறக் கணினி,இலவசமாக இணையதளத்தை உருவாக்கிப் பயன்படுத்துவது எப்படி..? சி,சி++,ஜாவா மொழிகளின் பொது வடிவங்கள் எனும் கணினி நூல்கள் மற்றும் விழிகள் தீட்டிய சிற்பி,கவி விசை எனும் கவிதை இ-புத்தகங்களின் ஆசிரியர்.பிரபலதிரைப்பட பாடலாசிரியர் சினேகன்,ப்ரியன் அவர்களின் நட்பில் வளர்ந்து வரும் இக் கவிஞர் சினிமா துறையில் கால் பதிக்கப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

- K.ஷிஜு,ஸ்ரீ பத்ரா நிவாஸ்,காக்கச்சல்,
மணியங்குழி, 
கன்னியாகுமரிமாவட்டம்