Go to content Go to menu

2015

oruthi-oruvanukku---c.p.sivarasan.jpg

 

நூல்விவரஅட்டவணை

நூலின்தலைப்பு

 ஒருத்தி ஒருவனுக்கு

 

 

ஆசிரியர் பெயர்

செ.பா.சிவராசன்

 

 

மொழி

தமிழ்

 

 

முதற்பதிப்பு

2015

 

 

உரிமை

பதிப்பகத்தாருக்கு

 

 

வெளியீடு

கீதம் பப்ளிகேசன்ஸ்
3/3,பத்மாவதி அவென்யூ,
பெருங்குடி,சென்னை -96.

 

 

நூலின்அளவு

 டெம்மி 

 

 

 

 

 

 

அச்சுஎழுத்து

11 புள்ளி

 

 

 

 

அச்சிட்டோர்

சாய்தென்றல் ,சென்னை -4

 

 

விலை

 45 /-

 

 

மொத்தப்பக்கங்கள்

94

 

 

 

 

 

 

 

பதிப்புரை
அனைவருக்கும் வணக்கம்,

வெறுமனே ஏதோ நாமும் எழுதுவோம், எழுத்தாளன் என்று பிறர் சொல்வதில் பெருமிதம் கொள்வோம் என்று எழுத ஆரம்பிக்கின்ற அறிமுக எழுத்தாளர்கள் மத்தியில் இவருடைய அறிமுக எழுத்துக்களே இந்த சமூகத்திற்கு ஏதாவது ஒரு வகையில் நம் எழுத்துக்களும் சிந்தனைகளும் பயன்பட வேண்டும் என்ற அக்கறை உள்ள ஆசிரியர் இவர். இவருடைய முந்தைய நூல்கள் அதற்குச்சான்று.

அந்த வகையில் இவருடைய சமூக அக்கறைக்கு இந்த நூல் மற்றொரு சான்று . தான் சார்ந்த சமூகத்தோடு அதன் வாழ்க்கை முறையையும் உற்று நோக்கி நிகழ்ந்த நிகழ்வுகளை ஒரு சிறு நாவல் வடிவில் புதினமாய் இங்கு இவர் வழங்கியிருக்கிறார். அதில் உள்ள கருவே இப்புத்தகத்தின் தலைப்பாய் வைத்திருக்கிறார். எழுத்து நடை எளிமையாய் அழகாய் அதே சமயம் கருத்துக்களை ஆணித்தரமாய் வழங்கியிருப்பது சிறப்பு.

படித்துவிட்டு வாசகர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தால் இன்னும் இவருடைய வளர்ச்சி பெருகும். செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்


உங்கள் ஞானசி
கீதம் பப்ளிகேசன்ஸ்
பெருங்குடி,சென்னை-96.

-----------------
முன்னுரை


விழுதாய் விழும் விழுதுகளாய் மனதிற்குள் ஆசைகள். மறக்க முடியாத காமன் மந்திரத்தில் பலியாகி பூமியெங்கும் தேவிகளின் அலறல்கள். தேவதைகள் பெயர் தாங்கி வேதனைத் தாங்கிகள். அடக்கிக் கொள்ள முடியாத ஆசைக் கம்பளங்களில் சீக்கிரமாய் வந்து போகிறவர்கள் கதைகளை நாலாப்புறமும் நிரப்பி நாலாப்புறமும் பரப்பும் ஊடகங்கள்.பெண்ணடிமை மாறி சம உரிமைக்கு வரும் காலக் கட்டத்தின் மாற்றம். அறிவியல் வாரிசுகள்(செல்போன்,பேஸ்புக்,டுவிட்டர்,வாட்ஸ் அப்) வளர்க்கும் கலாச்சார முறையில் எவரோடும் எவராயினும் பழகும் வாய்ப்பு. உடல்களைக் கவர அணியும் ஆடைகளின் அணிவகுப்பு. பாலியியல் கல்வி கேட்டு கண்களுக்குள் முடியும் போராட்டம். மூத்தோர் சொல்லுக்கும் கருத்துக்கும் இடமில்லாமை, ஒருத்தனுக்குப் பலரும், ஒருத்திக்குப் பலருமாய் வாழ்வதன் அடையாளமாய் இந்தியா எய்ட்ஸ்-ல் வளர்ச்சி. காதலில் வேறுபாதை போன்றவைகளால் உலகம் மாறி வரும் இக் காலக் கட்டத்தில், பாரத தாய் எனக்கு இட்ட கட்டளை ஒரு திரைப்படக் கதையாக எண்ணம் பெற்று பின் இப்படியொரு நாவலாய் மாற அதை சமூக மாற்றத்திற்கு ஓர் ஊடகமாய் புத்தக வடிவமாக்கி வெளியிட்டுள்ள கீதம் பதிப்பக நிறுவனத்திற்கு நன்றி நவில்கிறேன். ஒருத்திக்கு ஒருவனுமாய், ஒருவனுக்கு ஒருத்தியுமாய் வாழவும், அன்றாடம் நடக்கும் பாலியியல் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை இந்நாவல் மூலம் உலகுக்கு வெளிக் காட்டியுள்ளோம். இந் நாவலைப் படித்தபின் ஒருத்திக்கு ஒருவனுமாய், ஒருவனுக்கு ஒருத்தியுமாய் வாழ ஒவ்வொருவரையும் அவரவர் இதயங்கள் கேட்டுக் கொள்வது மட்டுமின்றி வாழச்செய்யவும் வைக்கும் என்பது உறுதி.

இந் நாவலைப் படைக்க உதவிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் உள்ளபடியே நன்றி நவில்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். மேலாக இந் நாவலைப் படிக்கும் அனைவருக்கும் நன்றிகள் பகிர்கிறேன். வாழ்த்துகிறேன்.
“"செல்லும் வழியில் வலிகள் இருந்தாலும்
வெல்லும் வழியில் விதிகள் செய்வோம்”"

நன்றிகளுடன்,
செ.பா.சிவராசன்
09-10-2014
தைக்கள்ளி விளை, மங்கலக்குன்று &அஞ்சல்
கன்னியாகுமரி மாவட்டம் - 629 178
www.vahai.myewebsite.com