Go to content Go to menu

2016

kanakathikaram---2.jpg

 

நூல்விவரஅட்டவணை

நூலின்தலைப்பு

 கணக்கதிகாரம்-2  

 

 

ஆசிரியர் பெயர்

செ.பா.சிவராசன்

 

 

மொழி

தமிழ்

 

 

முதற்பதிப்பு

2016

 

 

உரிமை

பதிப்பகத்தாருக்கு

 

 

வெளியீடு

கீதம் பப்ளிகேசன்ஸ்
3/3,பத்மாவதி அவென்யூ,
பெருங்குடி,சென்னை -96.

 

 

நூலின்அளவு

1X 8 டெம்மி 

 

 

 

 

 

 

அச்சுஎழுத்து

12 புள்ளி

 

 

 

 

அச்சிட்டோர்

சாய்தென்றல் ,சென்னை -4

 

 

விலை

 130 /-

 

 

மொத்தப்பக்கங்கள்

X+102

தாளின் தன்மை

 

18.6

 

பதிப்புரை

அனைவருக்கும் வணக்கம்,
"ஆற்றில போட்டாலும் அளந்து போடு" அப்படிங்கிற பழமொழி எல்லோருக்கும் தெரியும். ஆத்துல என்னத்த போடுவாங்க. அப்படியே போட்டாலும் எதுக்கு அளந்து போடணும் .. எதை எதை எப்படி அளக்கணும் .. அப்படின்னு நீங்க கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டே போகாதீங்க. கொஞ்சம் நில்லுங்க . எல்லாத்திலயும்  ஓர் அளவு இருக்கு. அதை எப்படி அளக்கிறதுங்கிற கணக்கு இருக்கு. அந்தக் காலத்தில எல்லாம் சும்மா மனக்கணக்காகவே எல்லாத்தயும் கூட்டி, கழிச்சு, பெருக்கி, வகுத்துச்சொல்லிடுவாங்க. ஆமா, இப்ப அந்தக் கணக்கெல்லாம் எங்க போச்சு.. எல்லாம் நம்ம காலம் மாறி போச்சு அப்படின்னு நீங்க சொல்லுறது எங்காதுல விழுது. சரி..சரி.. இப்ப விசயத்துக்கு வருவோம்.

இந்த புத்தகம் உங்கள கணக்குப் பண்ணப் போகுது. அத சொல்லித் தரப் போகுது. ஆமா.. இத படிச்ச உடனே நீங்க போட்ட கணக்கு சரியா அப்படின்னு உங்க கால்குலேட்டர தேடாம உங்க மனசாலேயே சொல்லிடலாம். பழைய, நாம மறந்து போன நம்முடைய முன்னோர்கள் பெரியவர்கள் சொல்லியதெல்லாத்தயும் ஞாபகப்படுத்தி நாம் கணக்குப் போடத் தயாராக்கப் போகுது இந்தப் புத்தகம். கணக்கதிகாரம்-னு ஏற்கனவே புத்தகம் இருக்கிறதால இப் புத்தகத்துக்குக் கணக்கதிகாரம் 2 அப்படின்னு பேரு வச்சிருக்காரு ஆசிரியர் செ.பா.சிவராசன் அவர்கள். சும்மா சொல்லப்புடாது.. நல்லாவே கணக்குபோடச்சொல்லித் தாராரு. பள்ளிக்கூட பசங்களுக்கு மட்டுமல்ல ஆசிரியப் பெருமக்களுக்கும் இது உபயோகமாக இருக்கும்னு அடிச்சுச்சொல்லலாம். அம்புட்டு விசயத்தையும் எடுத்துக்காட்டி மேற்கோள் காட்டி, அடிக்குறிப்புகளும் சொல்லி இலக்கியத்தரத்துடன் எழுதியிருக்காரு நம்ம சிவராசன். வாங்கி படிச்சிட்டு தப்பா கணக்குப் பண்ணுறவங்கள நீங்க சட்டுன்னு தப்புன்னு சொல்லி திருத்திடலாம்: நீங்களும் தப்புக் கணக்கிலிருந்து தப்பிச்சுடலாம். அதனாலே, கண்டிப்பா இப் புத்தகத்தை நீங்க வாங்குறதோட மட்டுமில்லாம உங்க நண்பர்கள், உறவினரகள், மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் சிபாரிசு செய்யுங்க, வாங்கியும் கொடுங்க. கொடுப்பீங்க.. நீங்களும் படிப்பீங்க... என்ன சரிதானே..!

வாழ்த்துக்கள்!
- ஞானசி
பதிப்பகத்தார்

 

வாழ்த்துரை


திரு.  தேவதாசன்
கணித ஆசிரியர்
புனித பெர்னதெத் மேனிலைப் பள்ளி
மங்கலக்குன்று 
கன்னியாகுமரி மாவட்டம்

கவிஞர் செ.பா.சிவராசன் அவர்களுக்கு எனது உளம் கனிந்த வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவர் எழுதிய பெர்னதெத் காவியம் என்ற கவிதை நூலைப் படித்து மகிழ்ந்துள்ளேன். தற்போது கணக்கதிகாரம் 2 என்ற கணித நூலை எழுதியுள்ளார். இது மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆர்வமாக படிக்கும்படியாக கதைகளையும் உரையாடல்களையும் கவிதைகளையும் கலந்து கணிதத்தை எளிதாக கற்கும் முறைகளை விளக்கியுள்ள விதம் பாராட்டுக்குரியது. கூட்டல்,கழித்தல்,பெருக்கல், வகுத்தல், மி.சி.ம காணல் போன்றவற்றை அனைவரும் எளிதாக கற்கும் வகையில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியிருக்கும் பாங்கு பாராட்டுக்குரியது. நான் ஒரு கணித ஆசிரியர் என்ற முறையில் அவர்களை வாழ்த்துவதில் பெருமையடைகிறேன். மேலும் இது போன்ற பல படைப்புகளைப் படைத்து நாட்டிற்கு பெருமை சேர்த்து புகழுடன் வாழ வாழ்த்துகிறேன்.

 

 

வாழ்த்துரை

 

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் 2014 - 2015 ஆம் கல்வியாண்டுத் தேர்வில் தோல்வியுற்றதால் 2471 மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர் என்பது மிகுந்த மன வருத்தத்தைத் தரும் செய்தியாகும்.

அதிக மதிப்பெண்களும் படிப்பும் மட்டுமே வாழ்க்கை இல்லை. படிப்பு என்பது வன்முறை ஆயுதமாக மாறியிருக்கிறது. எனவே கல்வியை மிக எளிமையாகக் கற்றுத்தர வேண்டியதும்,படிப்புடன் கூடிய வாழ்க்கைதான் முக்கியம் என்பதையும் அறிவுறுத்தியாக வேண்டும்.

கணிதப் பாடம் பல மாணவர்களுக்கு எரிச்சலையும், கசப்பையும் தருகிறது. அதை எளிமையாக்கிக் கற்றுக் கொடுக்க வேண்டியது கல்வியாளர்களின் மிகப்பெரிய கடமையாகும். அந்தக் கடமையை இந்நூலின் ஆசிரியர் சிவராஜ் ( செ.பா.சிவராசன் ) தொடங்கியிருக்கிறார். இது பாராட்டிற்குரியது. இந்த நூலை வாசித்து யாவரும் பயனடைய வாழ்த்துகிறேன்.

அருள்பணி ஞா.ஜோசப் ரொமால்டு
தாளாளர்
புனித பெர்னதெத் மேனிலைப்பள்ளி
மங்கலக்குன்று

 

 

முன்னுரை

கவிதைகளின் கால்கள் வலிக்க வலிக்க கற்பனையை சுமத்திய நான் முதன் முதலாய் கணிதக் கடவுள் மேல் சுமத்திய கற்பனையே நீங்கள் ஆவலாய் படிக்கவிருக்கும் இந்த நூல். சில கணக்குகளுக்குத் தீர்வு காண வேறு எளிய வழிகளை ஆராய்ந்த போது கிடைத்த வெற்றியின் முடிவுகளை சிறுவர்களுக்கும் பு¡¢யும் வகையில் கதையாகவும், கவிதையாகவும் இவ் இரண்டிற்குள்ளும் கணிதத்தையும் புகுத்தி இந் நூலினை வாசிக்கும் வாசகர்களுக்கு பா¢சளித்திருக்கிறேன். இப் பா¢சினை வாசகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன். கணிதத்தை இன்னொரு கோணத்தில் கற்றுத் தரும் இந் நூலினை யாவரும் கணித அறிவில் சிறந்து விளங்கிட வேண்டுமென்ற உயர்ந்த எண்ணத்தோடும் கடின உழைப்போடும் உங்கள் கைகளில் நூலாகக் கொண்டு சேர்த்துள்ள கீதம் பதிப்பகத்திற்கு உளமார்ந்த நன்றிகள். 

கணித முறைகளை பலமுறை சோதனைச் செய்து இந் நூலின் தரத்திற்காக உழைத்த எனது மனைவி க.எ.ஏஞ்சலின் சஜிதா-க்கும் மற்றும் இந் நூலினை ஆய்ந்து அணிந்துரை வழங்கி அழகாக்கிய கணித ஆசி¡¢யர்  -க்கும், வாழ்த்துரை வழங்கிய  -க்கும் -க்கும் உள்ளபடியே நன்றி நவில்கிறேன். மேலும் இந் நூல் வெளிவர உதவிய எனது குடும்ப உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் உள்ளபடியே நன்றி நவில்கிறேன். 


இந் நூலினை வாங்கிப் பயன்படுத்தும் அனைவரையும் உள்ளபடியே வாழ்த்தி வரவேற்கிறேன். இக் கணக்கதிகாரம்-2 நூலிற்கு கணக்குப் பார்க்காமல் உங்கள் பேராதரவினைத் தருவதன் மூலம்  இந் நூல் விற்பனையில் படைக்கும் சாதனையைக் காட்டிலும் வாசகர்களாகிய நீங்கள் கணிதத்தில் சாதனைப் படைக்க வாழ்த்துக்கள் கூறி மேலும் இந் நூல் பற்றியக் கருத்துக்களை எமக்குத் தொ¢விப்பதன் மூலம் இந் நூலின் குறைகளையும் , நிறைகளையும் மதிப்பீடு செய்ய முடியும் என நம்புகிறேன். 

 

செ.பா.சிவராசன்
மங்கலக்குன்று & அஞ்சல்
கன்னியாகுமா¢ மாவட்டம்,
www.vahai.myewebsite.com
cpsivarasan@gmail.com 

 

muthalvanin-natkuripu.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

நூல்விவரஅட்டவணை

நூலின்தலைப்பு

முதல்வரின் நாட்குறிப்பு

 

 

ஆசிரியர் பெயர்

செ.பா.சிவராசன்

 

 

மொழி

தமிழ்

 

 

முதற்பதிப்பு

2016

 

 

உரிமை

பதிப்பகத்தாருக்கு

 

 

வெளியீடு

கீதம் பப்ளிகேசன்ஸ்
3/3,பத்மாவதி அவென்யூ,
பெருங்குடி,சென்னை -96.

 

 

நூலின்அளவு

1X 8 டெம்மி 

 

 

 

 

 

 

அச்சுஎழுத்து

12 புள்ளி

 

 

 

 

அச்சிட்டோர்

சாய்தென்றல் ,சென்னை -4

 

 

விலை

 100 /-

 

 

மொத்தப்பக்கங்கள்

X+93

தாளின் தன்மை

 

18.6

 

பதிப்புரை

ஒரு முதல்வரின் நாட்குறிப்பு.. பொதுவாக நாட்குறிப்பு எழுதுவது என்பது அவரவர் தன்னைப்பற்றித் தான் தெரிந்து கொள்வதற்கும்,தன் காலத்திற்குப் பிறகு தன்னை பிறர் தெரிந்து கொள்வதற்குமாகத்தான் இருந்து வருகின்றது. அந்த வகையில் இந்த ' முதல்வரின் நாட்குறிப்பு' என்கிற நூல் சற்று வித்தியாசமானது. பொதுஜன பார்வைக்காக வைக்கப்பட்ட ஓர் புத்தகமாக இது விளங்குகின்றது.

அரசியல் சாக்கடை என்று எல்லோரும் ஒதுங்க ஒதுங்க மேலும் அது நாறிக்கொண்டிருப்பதற்கு நல்லவர்களாகிய நீங்களும் அதற்கு உடந்தையாகி விடுகின்றீர்கள் என்று சொல்லாமல் சொல்கிறது இப் புத்தகம். ஒவ்வொரு சிறிய மாற்றமும் ஓர் பெரிய மாற்றத்திற்குண்டான முதற்படி என்பதைச்சொல்லும் நூல்.

இப்படி இருக்கத்தான் ஆசை.. என்ன பண்ணுவது ? எங்கு தொடங்குவது? அல்லது எதை(யாரைப்) பின்பற்றி ஆரம்பிப்பது? பொறுப்பை எப்படி ஏற்பது? என்பது போன்ற பல கேள்விகள் தொடர வேறு வழி தெரியாமல் பின் வாங்கிவிடுவது.. அந்த வகையில் எல்லாக் கேள்விகளுக்கும் இல்லாவிட்டாலும் அடிப்படையான சில கேள்விகளுக்கு விடைக் காணக்கூடிய வகையில் இந் நூல் அமைந்திருப்பது சிறப்பு.

எப்படி இருக்க வேண்டும் என் கிற சிந்தனையை நம்மையறியாமல் நம்மிடம் வந்து ஒட்டிக்கொள்ள வைக்கிறது இப் புத்தகம்.

பயனுள்ள நூலை வாசிப்பதால் நீங்கள் மாறுவதோடு இச்சமூகமும் மாற்றமடையும் உயர்வை நோக்கி. நன்றி

அன்புடன்
பதிப்பகத்தார் 

 

 

 

 

 முன்னுரை
 
        என் சிந்தனைத் துளிகளை சமுதாயக் கல்லின் மேல் சிந்தியிருக்கிறேன். காய்ந்துதான் அடையாளமின்றி போகும் என்றாலும் துளிகள் பட்ட இடத்தைக் கொஞ்சமாவது மாற்றி விடும் என நம்புகிறேன். இந்த நூலினைக் கதைக்காக எழுதவில்லை. இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் சமுதாயத்திற்கு எதையேனும் ஒன்றை தினமும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே எழுதியிருக்கிறேன். சமூக சேவை மனப்பான்மை எல்லோ¡¢டத்திலும் இயல்பாக அமையவேண்டும். அந்த இயல்பான மனப்பான்மையினை ஒவ்வொருவா¢டத்திலும் உருவாக்க இந் நூல் உதவும் என நம்புகிறேன். இன்னொரு தமிழகத்தையும் ஆட்சியையும் திட்டங்களையும் ஒரு முதலமைச்சரையும் உங்கள் முன் காட்டியிருக்கிறேன். இதில் எந்த இனத்தவரையும், எந்த கட்சியினரையும், எந்த அதிகா¡¢களையும் புண்படுத்தும் நோக்கிலோ அல்லது இழிவுப் படுத்தும் நோக்கிலோ எழுதப் படவில்லை என்பதை இந் நூலினை படிக்கும் யாவரும் அறிவீர்கள் என நம்புகிறேன். 
 
  இந்த நூலினை எனது நண்பர்களிடம் வாசித்துப் பார்த்து கருத்துக்களைத் தொ¢வியுங்கள் எனக் கேட்டேன். இந்த நூலின் சிலப் பக்கங்களைப் படித்து முடித்த போது அவர்கள் தினமும் அலுவலகம் சென்று வரும் அரசுப் பேருந்தில் (89F உதயமார்த்தாண்டம் - குலசேகரம்) மக்களை சிந்திக்க வைக்கும் அப்துல்கலாம், நம்மாழ்வார்,சுகி சிவம் போன்றோ¡¢ன்  உரைகளை ஒலி பரப்பி வருகிறோம் என்றனர். அவர்களை கை குலுக்கிப் பாராட்டினேன். இந்த நூலில் மேலும் சில பக்கங்களைப் படித்த நண்பர் இதய அறுவை சிகிட்சைப் பி¡¢வில் பணியாற்றும்  வசந்த்(மங்கலக்குன்று) ஆன்ஜியோ பிளாஸ்டிக் அறுவை சிகிட்சை முறை பற்றியும் இதய நோய்கள் பற்றியும் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை உருவாக்க புத்தகம் ஒன்று வெளியிடப்போவதாகக் கூறி அதற்காக உழைத்து வருவதாகவும் கூறினார். இன்னொரு நண்பர் மெர்லின் ஆன்றோ(கானாவூர்) முதலமைச்சா¢ன் வி¡¢வானக் காப்பீட்டுத் திட்டத்தில் பணி பு¡¢பவர். அவர் காப்பீட்டுத் திட்டம் பற்றியும் அதை எப்படி பெறுவது போன்ற வழிமுறைகளையும் மக்களுக்குத் தொ¢யப்படுத்தும் நோக்கில் ஒரு புத்தகம் வெளியிட உழைக்கத் தொடங்கி விட்டதைக் கூறினார்.
 
        நண்பர் சுஜின்(நட்டாலம்) முதியவருக்கு நான் எழுந்து இடம் கொடுக்கும் பழக்கம் எனக்குப் புதியது என்றும் இப் புது பழக்கம் வர “ பேருந்தில் அமர்ந்து பயணிக்கும் நாம், முதியவர்களுக்கும்,கையில் குழந்தையோடு பயணிப்பவர்களுக்கும், உடல் நிலை சா¢யில்லாதவர்களுக்கும் தனது இருக்கையைக் கொடுப்பது கூட சமுதாயப் பணிதான்” என நீ எழுதியிருந்ததுதான் காரணம் என்றார். உடன் பணியாற்றும் நண்பர் அபி (பொன்மனை) இயற்கை உரங்கள் மூலம் காய்கறி விளைவிக்க முன்வந்திருக்கிறேன். ஏதோ என்னால் முடிந்தது. இயற்கை வழியில் ஒரு மிளகாய் கிடைத்தால் கூட புற்று நோயின் தாக்கத்தினை கொஞ்சமாவது குறைக்க முடியுமே என்றும் வீட்டருகில் உள்ளவர்களுக்குக் கொடுக்கும் அளவுக்கு காய்கனிகள் விளைந்தாலும் அது என்னால் நிறைவேறுமே எனக் கூறினார். முழுமையாகப் படித்து முடிக்கும் முன்பே இப்படிப்பட்ட செய்திகளைக் கேட்கவும் பார்க்கவும் முடிகிறது என்றால் இந்த நூல் வெளியாகி பலரும் வாசிக்கையில் ஒவ்வொருவர் மூலமும் சமுதாயம் நிச்சயம் மாறும் என முழு நம்பிக்கை அடைகிறேன்.
 
         ஒவ்வொருவரும் சமூக அக்கரையினை வளர்த்தெடுக்க, பதிப்பித்து வெளியிட்டுள்ள கீதம் பதிப்பகத்தின் நிறுவனர் திரு.ஞானசி அவர்களுக்கும்,குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும்  இந் நூல் வழியாக நன்றி கூறுகிறேன்.எனது படைப்புகளுக்கு ஆதரவு அளித்து வரும் வாசகப் பெரு மக்களுக்கு நன்றி தொ¢விக்கிறேன். இனி வரும் அரசாங்கம் எந்தெந்த திட்டங்களைச் செயல்படுத்தினால் தமிழகம் வளமிக்கதாக மாறும் என்பதைக் காட்சிப் படுத்தியுள்ள தமிழகத்தில்  வாழ்ந்து பார்க்க சிறப்பு விருந்தினராக வருகை தர வேண்டுமாய் உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கிறேன். 
 
                  வாழ்த்தி நன்றியுடன்
 
                                செ.பா.சிவராசன்
                                 மங்கலக்குன்று
               கன்னியாகுமா¢ மாவட்டம், 629 178
                        www.vahai.myewebsite.com
 
          

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

maths shortcut book by c.p.sivarasan, mangalakuntu, kanyakumari dist.