Go to content Go to menu

2017

 

 

நூல்விவரஅட்டவணை

நூலின்தலைப்பு

வைரஸ் இல்லாமல் கணினியை இலவசமாக உருவாக்கி பயன்படுத்துவது எப்படி..?

 

 

ஆசிரியர் பெயர்

செ.பா.சிவராசன்

 

 

மொழி

தமிழ்

 

 

முதற்பதிப்பு

2017

 

 

உரிமை

பதிப்பகத்தாருக்கு

 

 

வெளியீடு

கீதம் பப்ளிகேசன்ஸ்
3/3,பத்மாவதி அவென்யூ,
பெருங்குடி,சென்னை -96.

 

 

நூலின்அளவு

 1X8 டெம்மி 

 

 

 

 

 

 

அச்சுஎழுத்து

12 புள்ளி

 

 

 

 

அச்சிட்டோர்

சாய்தென்றல் ,சென்னை -4

 

 

விலை

70 /-

 

 

மொத்தப்பக்கங்கள்

98

 

 

 

 

 

 

 

வாழ்த்துரை

 
சர்வதேச மீத்திறன் கணினி மாநாடு (International Supercomputing Conference)              ஜீன் 2016-ல் ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகா¢ல் நடைபெற்றது. சன்வேய் தைஹீலைட் (Sunway Taihulight) மீவேக கணினி வா¢சையில் முதல் இடம் பெற்றது. இதில்  பயன்படுத்தப்பட்டுள்ள சன்வேய் ரெய்ஸ் 2.0.5 என்ற இயங்குதளம் லினக்ஸ் மூலம் தான் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. இத்தகு சிறப்பு வாய்ந்த லினக்ஸினை பாமரரும் அறிந்து பயன்படுத்தும் வண்ணம் எளிய தமிழில் எழுதியது, விளக்கியது மட்டுமின்றி சாதாரணமாக கணினி பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களையும் தாமாகவே ஒரு இயங்குதளத்தை உருவாக்க தூண்டியிருப்பது சிறப்பிற்கு¡¢யது. வைரஸ் இல்லாமல் எப்படி கணினியை உருவாக்கலாம், தாமாகவே ஒரு இயங்குதளத்தை எப்படி உருவாக்கலாம்  என விளக்கும் இரு தரப்பட்ட நோக்கங்களை ஒரே நூலின் மூலம் சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் இவ் அ¡¢ய பணியினைப் பாராட்டுகிறேன். வைரஸ் இல்லாத கணினி முயற்சி வெற்றியடையட்டும். வாழ்த்துக்கள்.  
 
Dr.E.Kannan Ph.D.
Registrar,
Veltech University.
Avadi, Chennai -600 062
 
 
ஆசிரியரிடமிருந்து...
 
மதிப்பிற்குரியவர்களாகிய வாசகர்களின் பேராதரவிற்கிணங்க, இந்த 9-வது நூல் வழியாக மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
 
கணினியின் உயிர் என அழைக்கப்படுவது இயங்கு தளமே ஆகும். கணினியைப் பயன்படுத்துபவரையும்(user) கணினியையும் இணைக்கப் பயன்படுவது இயங்குதளம். இந்த இயங்கு தளம் தான் கணினியிடம் இணைக்கப்பட்டிருக்கும் கருவிகளை(devices) இணைத்து கணினியைப் பயன்படுத்த வழங்கும்  கட்டளைகளுக்கேற்றவாறு இணைத்து செயல்பட வைக்கிறது. இதில் கோளாறு ஏற்பட்டால் கணினியுடன் இணைக்கப்பட்ட கருவிகளையும் மென் பொருள்களையும் இயக்குவிக்க முடியாமல் போய்விடும். நமது பயன்பாட்டிற்கு ஏற்றவாறு இயங்கு தளங்களைத் தேர்வு செய்து பயன்படுத்துவது அவசியமானது. பல வகையான இயங்குதளங்கள் பல வகையான விலைகளில் கிடைத்தாலும், இலவசமான அதிக ஆற்றல் வாய்ந்த இயங்கு தளங்கள் இருக்கத்தான் செய்கின்றன. மைக்ரோசாப்ட் இயங்கு தளங்கள் அதிக விலையாக இருப்பினும் இதில் வைரஸ் பிரச்சினைகளை முற்றிலுமாக ஒழிக்க முடியாது என அந் நிறுவனம் சார்ந்த steve balmer என்பவர் கூறியுள்ளதை அறியும் போது பணம் கொடுத்து வாங்கினால் மட்டுமே நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை புதைத்து விடுகிறது. விண்டோஸ் இயங்கு தளத்திற்காக இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டி வைரஸ்களின் எண்ணிக்கை சுமார் 230 கோடி என கருத்துக் கணிப்பில் அறிய முடிகிறது.உலகளவில் அதிகமாகப் பயன்படுத்தக் கூடிய இயங்கு தளங்களில் ஒன்று லினக்ஸ். இதற்கு காரணம் இது உபுண்டுவால் வடிவமைக்கப்பட்டது என்றாலும் உபுண்டுவை விட எளிமையான user friendly ஆகும்.
 
பல இயங்கு தளங்களைப் பயன்படுத்தி அதில் உருவாகும் பிரச்சினைகளை சா¢ செய்து அனுபவமிக்கவன் என்ற முறையில் சிறந்த இயங்கு தளம் linux என்பதை என்னால் கூற முடியும். இதற்கு கணினி துறையில் இருக்கும் பலர் எதிர் கருத்து தொ¢விக்கக் கூடும். அதற்குக் காரணம் கணினி என்றாலே விண்டோஸ்தான் என்ற மாயையும், கற்றல் முறையும் விண்டோஸ் இயங்குதளத்தை விட்டு நகரவில்லை. என்பதும்தான். விண்டோஸிலிருந்து லினக்ஸ்க்கு மாறுவது என்பது சாதி,மதங்களை மறந்து விட்டு தமிழ் என்ற புள்ளியில் தமிழர்கள் எப்படி இயங்க முடியவில்லையோ அதே போன்ற உணர்வை ஏற்படுத்துவதுதான்.
 
வைரஸ்களுக்கு பயப்பட்டு நமது உடலும் நமது கணினியும் இயங்கி வந்து கொண்டிருக்கிறது. வைரஸ்கள் உடலின் உயிரை பதம் பார்த்து விடுவது போல வைரஸ்களும் கணினியில் உள்ள நமது தகவல்களை அழித்தும், கணினியின் இயக்கத்தை நிறுத்தியும் விடுவதை அன்றாடம் நாம் பார்த்து வருகிறோம். நமது கணினியை ஆயுள் முழுக்க வைரஸ்களுக்குப் பயந்து கொண்டேயும் வைரஸ்களை புகுந்து விடாமல் இருக்க பயந்து பயந்து சுதந்திரமின்றியும், வைரஸ்களை அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்க்கொண்டு பணம் நேரம் இவைகளை செலவிட்டுக் கொண்டேதான் ஆயுளைக் கடக்க வேண்டுமா..? வைரஸ் இல்லாக் கணினி சாத்தியம் அற்றதா என பல கேள்விகளை என்னுள் கேட்டுக் கொண்டதன் விளைவால் கிடைத்த விடைகள் எல்லாம் இந்த நூலினை எழுத என்னைக் கேட்டுக் கொண்டன.
 
  தீமைகளைத் தரும் வைரஸ்களை ஒழிக்க வேண்டுமென்ற கனவு மருத்துவத் துறைக்கு இருப்பதைப் போல வைரஸ் இல்லாத கணினியின் இயக்க முறையினை பல கட்ட சோதனைகளுக்குப் பின்பும் சிற்சில ஆய்வுகளுக்குப் பின்பும் முழு சாத்தியப்படுத்தியிருப்பதை இந்த நூலினைப் பயன்படுத்தும் யாவரும் உணர்வீர்கள். 
 
வைரஸ் இல்லாத கணினியை நான் பயன்படுத்த வேண்டுமென தேடிய போது windows வகையான இயங்கு தளத்திலிருந்து லினக்ஸ் வகையான இயங்குதளத்திற்கு மாறினால் மட்டுமே சாத்தியப்படும் என்பதை உணர்ந்து லினக்ஸின் version-களை  பார்த்த போது வேறு version களைக் காட்டிலும் linux mint என்ற version எளிமையானதாக இருந்ததன் காரணமாக linux mint-ஐ எனது கணினியில் நிறுவி பயன்படுத்தி வருகிறேன்.windows-ல் செய்யும் அனைத்து வேலைகளையும் linux லிருந்து செய்து வருகிறேன்.
linux-என்றாலே சிரமம் என்ற கண்ணோட்டத்தை மாற்றி நீங்கள் இதுவரைப் பயன்படுத்தி பழக்கப்பட்ட விண்டோஸின் வடிவத்திலான             OS-ஐ இந்த நூல் வழியாக உங்களிடம் கொண்டு சேர்ப்பதில் துணை நின்ற நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் நன்றிகள் பல. 
 
இந்த நூலினை ஒருமுறை வாசித்தாலே நீங்கள் வைரஸ் இல்லா கணினிக்கு மாறிவிட விரும்பும் அளவிற்கு மொழி மற்றும் கணினியின் வழிகளை செழுமைப் படுத்தி இருக்கிறேன். கடலளவு பரந்த லினக்ஸ் உலகத்தை முழுவதும் இங்கு காட்டவில்லை எனினும் பொதுவாக windows-ல் பயன்படுத்தி வரும் அனைத்துப் பணிகளையும் செய்ய வழிமுறைகளை எளிய
விளக்கங்களோடும்,படங்களோடும் விளக்கியுள்ளேன்.ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். 
 
   இந்த நூலிற்கு வாழ்த்துரை வழங்கி வாழ்த்திய ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் டாக்டர் ரெமா வி நாயர் MBBS.,M.D.,DGO. அவர்களுக்கும்,மேலும், இக் கல்லூரியின் தலைமை நிர்வாகிகளான             Dr.C.K. Velayuthan Nair MBBS.,M.S. அவர்களுக்கும்,Dr.R.V.Mookambika MBBS.,M.D.,DM. அவர்களுக்கும் Dr.Vinu Gopinath MBBS.,M.S.,Mch அவர்களுக்கும் இந்த நூல் வழியாக நன்றி தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.வேல்டெக் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் இ.கண்ணன் Ph.D. அவர்களுக்கும் நன்றிகள் பல. மேலும்,எமது முயற்சிகளுக்கு உறு துணையாக இருந்து வரும் திரைப்பட பாடலாசிரியர்கள் பிரியன் சினேகன், மற்றும் கவிஞர்க.ச.கலையரசன், மனைவி திருமதி க.எ.ஏஞ்சலின் சஜிதா, செல்வி.வசந்தகுமாரி, திரு.ச.சந்தோஸ்,திரு. கு.வில்சன்,திரு.ரா.மோகன் மற்றும் வாசக நண்பர் மெர்லின் ஆன்றோ அவர்களுக்கும் நன்றிகள். வைரஸ் பிரச்சினையை முற்றிலும் ஒழிக்கப்படவிருக்கும் உங்களின் ஆரோக்கிய கணினிக்கும், துணிச்சலான கொள்கை முடிவிற்கும் பாலமாக இருந்த கீதம் பதிப்பகத்திற்கு நன்றி. இந்த நூலினைப் பயன்படுத்திய தாங்கள் எனது முந்தைய நூல்களையும் வாசிக்கத் துணியுங்கள். இந்த மாற்றம் போல் ஒவ்வொரு நூலும் உங்களுக்குள் ஒவ்வொரு மாற்றத்தை ஏற்படுத்தாமல் இருக்காது. 
 
வாழ்த்துக்களுடன், 
செ.பா.சிவராசன் (செ.சிவராஜ்)
www.vahai.myewebsite.com
 
15-12-2016
மங்கலக்குன்று
 
 
 

 

book.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நூல்விவரஅட்டவணை

நூலின்தலைப்பு

மொட்டுக்கள் பாடட்டும்

 

 

ஆசிரியர் பெயர்

செ.பா.சிவராசன்

 

 

மொழி

தமிழ்

 

 

முதற்பதிப்பு

2017

 

 

உரிமை

பதிப்பகத்தாருக்கு

 

 

வெளியீடு

கீதம் பப்ளிகேசன்ஸ்
3/3,பத்மாவதி அவென்யூ,
பெருங்குடி,சென்னை -96.

 

 

நூலின்அளவு

 1X8 டெம்மி 

 

 

 

 

 

 

அச்சுஎழுத்து

12 புள்ளி

 

 

 

 

அச்சிட்டோர்

சாய்தென்றல் ,சென்னை -4

 

 

விலை

70 /-

 

 

மொத்தப்பக்கங்கள்

92

 

 

 

 

 

 

 

வாழ்த்துரை